ETV Bharat / city

இலங்கையில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் தகர்ப்பு - கொதித்தெழுந்த தலைவர்கள்! - naam tamilar seeman statement on mullivaikkal

இலங்கை நாட்டின் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் தகர்க்கப்பட்டது தொடர்பாக தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் தங்களின் கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளனர்.

Mullivaikkal memorial, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ட்வீட், நாம் தமிழர் கட்சி அறிக்கை, விசிக திருமாவளவன் ட்வீட், முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி ட்வீட், வைகோ அழைப்பு, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம், முள்ளிவாய்க்கால் நினைவு தூண், முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண் தகர்ப்பு, thiruma tweet on mullivaikkal, Mullivaikkal massacre, ops tweet on mullivaikkal, eps tweet on mullivaikkal, naam tamilar seeman statement on mullivaikkal, vaiko statement on mullivaikkal
Mullivaikkal memorial
author img

By

Published : Jan 9, 2021, 12:35 PM IST

சென்னை: இலங்கை அரசால் கொல்லப்பட்ட அப்பாவி தமிழர்களை நினைவுகூரும் வகையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட தூண் இடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இலங்கை நாட்டின் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ளது முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண். இலங்கை அரசால் கொல்லப்பட்ட அப்பாவி தமிழர்களை நினைவுகூரும் வகையில் இந்தத் தூண் அமைக்கப்பட்டிருந்தது. நேற்று (ஜனவரி 8) இரவு இந்தத் தூண் தகர்க்கப்பட்டதால், பல்கலைக்கழக வளாகத்தில் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.

இந்நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள், தமிழ் ஆர்வலர்கள் இச்செயலுக்கு கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர்.

நாம் தமிழர் கட்சி அறிக்கை

ஈழப்பேரழிவைச் சந்தித்து ஆறா ரணத்தையும், கொடும் பேரிழப்பையும் சந்தித்து நிற்கும் தமிழர்களைச் சீண்டும் வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவிடம் இரவோடு இரவாக இடித்துத் தகர்க்கப்பட்டுள்ளது பேரதிர்ச்சி அளிக்கிறது.

ஒரு இனத்தைப் பேரழிவுக்குள் தள்ளி, இரண்டு இலட்சம் தமிழர்களைத் துள்ள துடிக்கப் படுகொலை செய்து, தமிழர்களின் வீட்டையும், நாட்டையும் அழித்து, நிலங்களை அபகரித்து, தமிழ்ப்பெண்களைச் சூறையாடி, தமிழர்களை அடையாளமற்று அழித்து முடித்து, மொத்த நாட்டையும் தங்களுடையதாக மாற்றிக் கொண்டுவிட்ட பிறகும், தமிழர்கள் மீதான வன்மமும், ஆத்திரமும் துளியளவும் சிங்களப்பேரினவாதிகளுக்குக் குறையவில்லை என்பதையே இது காட்டுகிறது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசிக திருமாவளவன் ட்வீட்

அதில், “யாழ் பல்கலைக்கழகத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தை இடித்துள்ளனர். சிங்கள இனவெறிப் படையினரின் இந்தச் இழிசெயலை விசிக வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழினத்தின் விடுதலைப் போராட்ட வீரச்சுவடுகளை முற்றாகச் சிதைக்கும் #சிங்கள_ஆதிக்கத்தைத் தகர்ப்போம். தமிழர் அடையாளம் காப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.

Mullivaikkal memorial, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ட்வீட், நாம் தமிழர் கட்சி அறிக்கை, விசிக திருமாவளவன் ட்வீட், முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி ட்வீட், வைகோ அழைப்பு, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம், முள்ளிவாய்க்கால் நினைவு தூண், முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண் தகர்ப்பு, thiruma tweet on mullivaikkal, Mullivaikkal massacre, ops tweet on mullivaikkal, eps tweet on mullivaikkal, naam tamilar seeman statement on mullivaikkal, vaiko statement on mullivaikkal
விசிக திருமாவளவன் ட்வீட்

முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி ட்வீட்

அதில், “இலங்கை, முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் இரக்கமின்றி கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவு தூண் இரவோடு இரவாக இடிக்கப்பட்டுள்ள செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது.

உலக தமிழர்களை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ள இலங்கை அரசின் இந்த மாபாதக செயலுக்கும் அதற்கு துணை போன யாழ்ப்பாண பல்கலைக்கழக துணை வேந்தருக்கும் எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ட்வீட்

அதில், “இலங்கைப் போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக யாழ்ப்பாண பல்கலையில் அமைக்கப்பட்ட நினைவுத்தூண் நேற்று நள்ளிரவில் இடித்து தகர்க்கப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

ஈழப்போரில் ஈவு இரக்கமின்றி கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க போராடிக் கொண்டிருக்கிற வேளையில், தமிழர்களின் உணர்வை மேலும் ரணப்படுத்தும், இனவெறியினரின் இந்த இழிசெயல் கடும் கண்டனத்திற்குரியது. ஏற்றுக்கொள்ள முடியாத இக்கொடுஞ்செயலை மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

வைகோ அழைப்பு

யாழ் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தூண் தகர்க்கப்பட்டதைக் கண்டித்து ஜனவரி 11ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என வைகோ அறிவித்துள்ளார். சென்னையிலுள்ள இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும். போராட்டத்தில் தமிழ் உணர்வாளர்கள், ஈழத் தமிழ் உணர்வாளர்கள், மதிமுகவினர் பங்கேற்க வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.