சென்னையை அடுத்த பூந்தமல்லி சவிதா தனியார் மருத்துவக் கல்லூரியில் தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா, அந்தமான் உள்ளிட்ட ஐந்து மாநில சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு இடையேயான தக்வாண்டோ எனும் தற்காப்புக் கலை போட்டிகள் நடைபெற்றன. இதில் 250க்கும் அதிகமான பள்ளிகளைச் சேர்ந்த 750க்கும் மேற்பட மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இவர்களுக்கு ஜூனியர், சப் ஜூனியர், சீனியர் உள்ளிட்ட பிரிவுகளில் உடல் எடை அடிப்படையில் பங்கேற்றனர். வீரர் வீராங்கனைகள் வெற்றிகொள்ளும் நோக்கில் பரஸ்பரம் ஆக்ரோஷமாகத் தாக்கிக் கொண்டது பார்ப்போரை வெகுவாக கவர்ந்தது. மேலும், வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட ராணுவ லெப்ட்டினல் கமாண்டர் பரிசு மற்றும் கோப்பையை வழங்கி கௌரவித்தார்
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், “இதுபோன்ற விளையாட்டுகள் மூலம் மாணவர்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ள ஏதுவாக இருந்துள்ளது. பிற நாடுகளைப் போன்று தற்போதுதான் இதுகுறித்து விழிப்புணர்வு நமது நாட்டில் ஏற்பட்டுள்ளது.மேலும் பல்வேறு வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன குறிப்பாக ராணுவத்தில் இந்த விளையாட்டுகளுக்கு மதிப்பளித்து வேலைவாய்ப்பு இருக்கிறது” என்றார்.