தமிழ்நாட்டில் திருத்திய வாக்களர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 2021 ஜனவரி 1ஆம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கருதி வாக்களர் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாம்கள் நவம்பர் 21, 22 ஆகியத் தேதிகளில் ஏற்கனவே நடைபெற்றன. அதன் தொடர்ச்சியாக நேற்றும், இன்றும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
தமிழ்நாட்டில் நேற்று (டிச. 12) நடைபெற்ற சிறப்பு முகாமில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் தங்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் எனப் படிவம் ஆறில் மூன்று லட்சத்து 11 ஆயிரத்து மூன்று பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
படிவம் 7-ஐப் பயன்படுத்தி 62 ஆயிரத்து 307 நபர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் என விண்ணப்பம் செய்துள்ளனர். வாக்காளர் தங்களின் இருப்பிடத்தை அந்தந்த தாெகுதிக்குள் மாற்றம் செய்ய வேண்டும் என 28 ஆயிரத்து 788 பேர் படிவம் 8-ஐப் பூர்த்திசெய்து விண்ணப்பித்துள்ளனர்.
வாக்களர் பெயர் பட்டியலில் திருத்தங்கள் செய்ய வேண்டும் என 41 ஆயிரத்து 852 வாக்களார்கள் விண்ணப்பம் செய்துள்ளனர் எனத் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு கூறியுள்ளார்.
இதையும் படிங்க: யாருக்கு முதலில் தடுப்பூசி போடலாம்? கரோனா இடரைக் கண்டறியும் கால்குலேட்டர்!