சென்னையில் தண்டையார்பேட்டை, திருவிக நகர், அண்ணா நகர் போன்ற இடங்களில் கரோனா வைரஸ் அதிகமாக பரவி வருகிறது. இருப்பினும் குணமடைந்தவரின் சதவீதமும் அதற்கு சரிசமமாக உள்ளது. இந்த நோய்த்தொற்றை குறைப்பதற்காக மாநகராட்சியும் சுகாதாரத் துறையும் தினமும் பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்குவது கபசுர குடிநீர் வழங்குவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக தினமும் 15 மண்டலங்களிலும் மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது. மே 8ஆம் தேதி முதல் இன்று ( ஜூலை 21) வரை மாநகராட்சி சார்பில் மொத்தம் 20 ஆயிரத்து 71 மருத்துவ முகாம்கள் நடைபெற்று உள்ளது. அதில் 12 லட்சத்து 22 ஆயிரத்து 931 நபர்கள் பரிசோதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் மருத்துவ முகாம்களின் மூலம் கரோனா பாதித்த 13 ஆயிரத்து 250 நபர்களை மாநகராட்சி கண்டெடுத்துள்ளது.
நேற்று (ஜூலை 21) 500 மருத்துவ முகாம்கள் நடைபெற்றன. அதிகபட்சமாக தேனாம்பேட்டையில் 51, ராயபுரம் மற்றும் திருவிக நகரில் 49 மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் மொத்தம் 27 ஆயிரத்து 414 நபர்கள் பரிசோதிக்கப்பட்டனர்.
அதில் 1, 615 நபர்கள் அறிகுறி இருந்ததால் அருகில் உள்ள கரோனா பரிசோதனை மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மீதமுள்ள நபர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்திக்கான மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது என சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையம் தெரிவித்துள்ளது.
20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள்: சென்னை மாநகராட்சி ஆணையம் - சென்னை முழுவதும் 20,000 க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள்
சென்னை: மே மாதம் முதல் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளது என மாநகராட்சி தெரிவித்துள்ளது.