கொல்கத்தாவில் இரண்டு பயிற்சி மருத்துவர்கள் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதைக் கண்டித்து இந்திய மருத்துவர்கள் சங்கம் நேற்று நாடுதழுவிய போராட்டத்தை நடத்தியது. இதன் ஒரு பகுதியாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட மருத்துவர்களுடன் பயிற்சி மருத்துவர்களும் இணைந்து மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இந்திய மருத்துவ சங்கத் தலைவர் டாக்டர் பாலகிருஷ்ணன், "இரண்டு மருத்துவர்களைத் தாக்கிய அடையாளம் தெரியாத நபர்களுக்கு கடுமையான தண்டனையை அரசு வழங்க வேண்டும். இந்திய மருத்துவமனைகளுக்கும் மருத்துவர்களுக்கும் பாதுகாப்பு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.