ETV Bharat / city

பருவமழை முன்னெச்சரிக்கையில் தீவிரம் காட்டும் சென்னை மெட்ரோ! - சென்னை மெட்ரோ

சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், ரயில் சேவை பாதிக்காத வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

metro
metro
author img

By

Published : Nov 4, 2020, 8:40 PM IST

கரோனா பாதிப்புக்குப்பின் சென்னை மெட்ரோ ரயில் 45 கிலோ மீட்டர் தொலைவிற்கு இரு வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. 19 சுரங்க வழிப்பாதைகள் மற்றும் 13 உயர் நிலைப்பாதைகள் வழியாக மெட்ரோ ரயில் பயணிக்கிறது. மெட்ரோ ரயில் நிலைய வளாகம், சுற்றுப்புறம், ரயில் பெட்டி, உயர் மட்ட பாதை மற்றும் சுரங்க வழிப்பாதை என அனைத்தும் மழை, புயல் போன்ற இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ளும் வகையிலேயே கட்டப்பட்டுள்ளன. இருப்பினும், எதிர்பாராத இயற்கை சீற்றங்களையும் எதிர்கொள்ளும் வகையில், கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் :

  • வானிலை நிலவரங்கள் குறித்து உடனுக்குடன் வானிலை மையத்திடம் தகவல் பெறப்பட்டு, அதற்கு ஏற்ப செயல்பட மெட்ரோ நிர்வாக செயலாக்க கட்டுப்பாட்டு மையத்தில், சிறப்பு கண்காணிப்புக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.
  • புயல் காலங்களில் காற்றின் வேகத்தை துல்லியமாக அளந்து தகவல் தரும் அனிமோமீட்டர் (Anemometer) எனும் கருவிகள், கட்டுப்பாட்டு மையம், விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையம், ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் உட்பட முக்கிய இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் காற்றின் வேகம் அளக்கப்பட்டு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
புயல் காற்றின் வேகத்தை துல்லியமாக அளக்கும் அனிமோமீட்டர்

  • மெட்ரோ ரயிலின் ஓட்டம் தரையில் இருந்து 15 முதல் 24 மீட்டர் உயரத்தில் உள்ளதால், புயல் காலங்களில் பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
  • புயல் காலங்களில் செயல்படுவதற்கு ஏற்ப ஓட்டுநர்கள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர். புயலின் வேகம் 70 கி.மீ. எனில், ரயிலின் வேகம் 40 கி.மீ. என்றும், புயலின் வேகம் 90 கி.மீ. தாண்டும் போது, ரயிலின் இயக்கம் நிலைமை சரியாகும் வரை நிறுத்தப்படும்.

மழைக்காலங்களில் ரயில் ஓட்டுநர்கள் மற்றும் நிலைய கட்டுப்பாட்டாளர் கீழ்க்காணும் நிகழ்வுகளை கண்காணித்து, உடனுக்குடன் செயலாக்கக் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  • ரயில் பெட்டிகளில் பாதுகாப்பு விளக்குகள், ரயில் பெட்டியின் முன்விளக்குகள், கதவு திறந்து மூடும் இயக்கம், முன்பெட்டியின் கண்ணாடியை துடைக்கும் கருவிகளின் செயல்பாடுகள் சோதனை.
  • மெட்ரோ ரயிலின் தரைவழி நிலையங்கள், சுரங்க வழிப்பாதைகளின் அருகே நீர் தேங்கும் வாய்ப்புகள் மற்றும் நீர்க்கசிவு வாய்ப்புகள் குறித்து தொடர் சோதனை.
  • உயர்நிலைப்பாதையில் OHE தடங்களில் வழக்கத்திற்கு மாறாக மாற்றங்கள் காணப்பட்டாலோ, பனிமூட்டத்தால் வழிப்பாதை தெளிவற்று இருந்தாலோ அதனை தெரிவிப்பது.
  • ரயில் நிலையத்தின் நுழைவு வாயில்கள், வளாகங்கள், தரைத்தளம் மற்றும் ரயில் பெட்டிகளில் ஏதேனும் கசிவு அல்லது ஈரத்தன்மை இருக்கிறதா என்பதை ஒவ்வொரு நிலையத்தின் கட்டுப்பாட்டாளரும் தொடர்ந்து கண்காணித்து அதனை உடனுக்குடன் சரி செய்ய அறிவுறுத்தல்.
பருவமழை முன்னெச்சரிக்கையில் தீவிரம் காட்டும் சென்னை மெட்ரோ

  • மழைக்காலங்களில் பயணிகள் அச்சமின்றி பயணிக்க அவர்களுக்கான அறிவிப்புகளும் வழிகாட்டுதல்களும் தொடர்ந்து வழங்க ஏற்பாடு.
  • மின்னல் தாக்குதல் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கும் அதிநவீன கருவிகள் முக்கிய துணை நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இக்கருவிகள் மின்னலின் வேகத்துக்கு ஈடுகொடுத்து அதனால் எந்த பாதிப்பும் ஏற்படாமல் தடுத்து பாதுகாப்பை உறுதி செய்யும்.

மேற்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் சென்னை மெட்ரோ ரயிலில், பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: ’மீட்பு விமானத்தில் கடத்தப்பட்ட குங்குமப்பூ’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.