ETV Bharat / city

விஷால் பிலிம் பேக்டரி ஊழியருக்கு எதிரான வழக்கு: அறிக்கைத் தாக்கல்செய்ய உத்தரவு - இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

நடிகர் விஷாலின், விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் முன்னாள் ஊழியருக்கு எதிரான கையாடல் வழக்கில் ஆறு மாதங்களில் இறுதி அறிக்கைத் தாக்கல்செய்ய விருகம்பாக்கம் காவல் துறையினருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

money laundering in vishal film factory  case filed against formal staff ramya in vishal film factory  High court give 6 months time to submit final report  விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் ஊழியருக்கு எதிரான கையாடல் வழக்கு  இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு  chennai high court latest news
சென்னை உயர் நீதிமன்றம்
author img

By

Published : Dec 23, 2021, 4:26 PM IST

சென்னை: நடிகர் விஷாலின், விஷால் பிலிம் பேக்டரியில் பணிபுரிந்த பெண் கணக்காளர் ரம்யா, ஊழியர்களின் ஊதியத்துக்கான வருமான வரித்தொகை 45 லட்சம் ரூபாயை வரித் துறைக்குச் செலுத்திவிட்டதுபோல போலி ஆவணங்களைக் காட்டிவிட்டு, அத்தொகையை தனது உறவினர்களின் கணக்குகளுக்கு மாற்றி மோசடி செய்ததாக, அந்நிறுவனத்தின் மேலாளர் ஹரிகிருஷ்ணன் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்தப் புகார் மீது 2020ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்ட போதும், இறுதி அறிக்கை ஏதும் இதுவரை தாக்கல்செய்யவில்லை எனக் கூறி, இறுதி அறிக்கைத் தாக்கல்செய்ய காவல் துறையினருக்கு உத்தரவிடக் கோரி, மேலாளர் ஹரிகிருஷ்ணன் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த மனு, நீதிபதி நிர்மல் குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆறு மாதங்களில் இறுதி அறிக்கைத் தாக்கல்செய்யப்படும் எனத் தெரிவித்தார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த வழக்கில் ஆறு மாதங்களில் இறுதி அறிக்கையைத் தாக்கல்செய்ய வேண்டும் என விருகம்பாக்கம் காவல் துறையினருக்கு உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:குடியரசு நாள் விழாவில் கோவை மாணவர்கள் நடனம்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.