ETV Bharat / city

சென்னை மாநகர வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு!

author img

By

Published : Feb 26, 2020, 1:34 PM IST

சென்னை: மாநகரப் பகுதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட உள்ளதைத் தொடர்ந்து வரைவு வாக்குச் சாவடி பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

corporation
corporation

சென்னைப் பெருநகர மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில், உள்ளாட்சித் தேர்தலுக்காக வார்டு வாரியாக வாக்குச் சாவடிப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, ஆண் வாக்காளர்களுக்காக 135 வாக்குச் சாவடிகள், பெண் வாக்காளர்களுக்காக 135 வாக்குச் சாவடிகள் மற்றும் அனைத்து வாக்காளர்களுக்காக 5,489 வாக்குச் சாவடிகள் என மொத்தம் 5,759 வாக்குச் சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த வரைவு வாக்குச் சாவடிப் பட்டியல்களை தேர்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான பிரகாஷ் இன்று வெளியிட்டார். மேலும், வரைவு வாக்குச் சாவடிப் பட்டியல் இன்று முதல் அனைத்து வார்டு, மண்டல, மாநகராட்சி அலுவலகங்களிலும், வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வருவாய் அலுவலர் அலுவலகத்திலும் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: டான்செட் நுழைவுத் தேர்வு: அண்ணா பல்கலைக்கழத்தைத் தொடர்பு கொள்ளலாம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.