ETV Bharat / city

'தமிழ்நாடு மாணவர்களை கல்லூரியில் கால் வைக்க விடாத மத்திய அரசு' - செல்வபெருந்தகை

தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் கல்லூரி வாயிலில் கால் வைக்க முடியாத சூழலை மத்திய அரசு உருவாக்குகிறது என்று காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் செல்வ பெருந்தகை குற்றஞ்சாட்டியுள்ளார்.

செல்வ பெருந்தகை எம்எல்ஏ
செல்வ பெருந்தகை எம்எல்ஏ
author img

By

Published : Apr 12, 2022, 6:51 AM IST

சென்னை: காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டபேரவை வளாகத்தில் நேற்று (ஏப்.11) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'தமிழை அழித்து ஒழித்துவிட்டு, சமஸ்கிருதம், இந்தியை வளர்ப்பதற்காக புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு கொண்டு வருகிறது. இதை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த முடியாது என்று முதலமைச்சர் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.

தமிழ் மாணவர்களின் கல்வி கேள்விக்குறி: இதற்கிடையே தற்போது, மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத்தேர்வு கொண்டு வந்து 12ஆம் வகுப்புக்கு பிறகு நுழைவுத் தேர்வு எழுதினால்தான், கல்லூரிக்கு செல்ல முடியும் என்ற நிலையை கொண்டு வருகிறது. இதன்மூலம், தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவ - மாணவிகள் கல்லூரியில் கால் வைக்க முடியாத நிலையை மத்திய அரசு ஏற்படுத்துகிறது.

செல்வ பெருந்தகை எம்எல்ஏ பேட்டி

டெல்லி ஜேஎன்யூ அசைவ உணவு விவகாரம்: கேரளாவில் கல்வி முறை வேறு; தமிழ்நாட்டில் கல்வி முறை வேறு. கல்வியில் முதன்மை மாநிலமாக இருக்கும் தமிழ்நாட்டை கல்வியில் பின்னுக்கு தள்ள முயல்வது ஏன்?" எனக் கேள்வியெழுப்பினார். தொடர்ந்து, டெல்லி ஜேஎன்யூ அசைவ உணவு விவகாரம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், "பாஜகவின் கொள்கை கோட்பாடு எல்லாம், ஒரே உணவு , ஒரே உடை, ஒரே மொழி என்பதாக இருக்கிறது. உணவு, உடை, மொழி ஆகியவை ஒவ்வொருவரின் உரிமை. அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காத பாஜக அரசுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் கொடுப்பார்கள்" என்றார்.

இதையும் படிங்க: பல்கலைக்கழக கட்டண உயர்வு - தொடரும் மாணவர்கள் போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.