ETV Bharat / city

சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி - ரூ.352 கோடி ஒதுக்கீடு

author img

By

Published : Dec 17, 2021, 7:30 AM IST

சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியாக 3 கோடியே 52 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டிற்கு ஒவ்வொரு ஆண்டும் நிதி அரசால் வழங்கப்படுகிறது.
இந்த தொகை அந்தந்த தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களின் தொகுதி கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக பயன்படுத்துவார்கள். 2021 - 22 ஆம் நிதியாண்டுக்கான மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல் இருந்த நிலையில், கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்த வேண்டும் எனவும், இதன் காரணமாக தொகுதி ஒதுக்கீடு விரைவில் செயல்படுத்துமாறும் எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.

இந்நிலையில் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 352,50,00,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 2021-22 ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 50 விழுக்காடு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019-2020 ஆம் ஆண்டிற்கான சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் அடிப்படையில் ஒரு தொகுதிக்கு 2.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களுடன் தொகுதி மேம்பாட்டு நிதி 2.50 கோடி ரூபாயிலிருந்து 3 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது. அத்துடன் பட்ஜெட் மதிப்பீட்டின் 702 கோடியில் 50 விழக்காடு நிதியை விடுவிக்க தேவையான அரசாணைகளை வெளியிடுமாறு அரசுக்கு கோரிக்கை எழுந்த நிலையில், தற்போது தொகுதி மேம்பாட்டு நிதி 50 விழுக்காடு மட்டும் விடுவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விரிவான வழிகாட்டுதல்கள்:

* கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் பின்வரும் வகைகளில் ஏதேனும் ஒன்றின் கீழ் அவரது விருப்பப்படி ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முன்னுரிமை பணிகளை தேர்வு செய்யலாம்.

* தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கான உள்கட்டமைப்பு (குறிப்பிட்ட ஆண்டில் அனைத்து கிராம அண்ணா மருமலர்ச்சி திட்டம் 2.0 மற்றும் பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

* ஸ்மார்ட் வகுப்பறையின் மொத்த செலவு ரூ. 2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும், தேவையின் அடிப்படையில் வகுப்பறைகளுக்கான புதிய கட்டிடங்கள் கட்டவும் முடியும்.

* அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கான உள்கட்டமைப்பு (கழிப்பறை வசதிகள் மற்றும் குடிநீர் தவிர) - வகுப்பறைகளுக்கான புதிய கட்டிடங்கள் தேவையின் அடிப்படையில் கட்டமைக்கப்படலாம்.

* அங்கன்வாடி மையங்கள் மற்றும் மதிய உணவு மையங்களுக்கு உள்கட்டமைப்பு வசதிகள் அங்கன்வாடி கட்டிடங்கள் / மதிய உணவு மையங்கள் மதிய உணவு சமையலறை கொட்டகைகள், அங்கன்வாடி குழந்தை நட்பு கழிவறைகள், அங்கன்வாடிகளுக்கு குடிநீர் வழங்கல் மற்றும் அங்கன்வாடி சமையலறை ஷெட்களை நவீனமயமாக்குதல் போன்றவை.

* இந்திரா ஆவாஸ் யோஜனா (IAY) / TAHDCO மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகள் உட்பட 31.12.2000 வரை அரசு திட்டங்களின் கீழ் கட்டப்பட்ட வீடுகளை பழுதுபார்ப்பதற்கு ஒரு வீட்டிற்கு ரூ.50,000/-க்கு மிகாமல், அதிகபட்சமாக ரூ. .30 லட்சம் (எம்எல்ஏசிடிஎஸ்-ல் 10%) இருப்பினும், பழுதுபார்க்கும் பணிகளை மேற்கொள்வதற்கு முன், DRDA / TAHDCO / TNUHDB இலிருந்து அனுமதி கடிதம் பெறப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பத்திரிகையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய முதலமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.