தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “நல்லாட்சியின் நற்பெயரை சிதைத்து, குறைக்க வேண்டும் என்ற கெடுசிந்தனையுடன் பொய்யை மட்டுமே சொல்லி வரும் அ.தி.மு.கவால் கடந்த10 ஆண்டுகளில் தமிழ்நாடு பட்ட பாட்டை நினைவுபடுத்துங்கள்.
தமிழ்நாட்டு மக்களின் மனதில் மதவெறியை விதைத்து, கலவரத்தைத் தூண்டி, அதில், அரசியல் குளிர்காய அவசரம் காட்டும் பா.ஜ.க.வின் சீரழிவு அரசியலை அம்பலப்படுத்துங்கள்” எனக் கோரியுள்ளார்.
மேலும், சமூகநீதி, சுயமரியாதை ஆகியவற்றை உள்ளடக்கிய திராவிட மாடல் அரசாக விளங்கும் திமுகவின் திட்டங்களும், செயல்பாடுமே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் களத்தில் நமக்கான நற்சான்றுக் கருவிகள் எனக் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், நல்லாட்சியின் விளைச்சலை, உள்ளாட்சியில் முழு வெற்றியாக அறுவடை செய்ய, ஊக்கத்துடன் அயராது பாடுபடுங்கள் என அறிவுறுத்தி உள்ளார்.
அன்றும், இன்றும் நம் மீது மக்கள் வைத்துள்ள மாறா நம்பிக்கை, என்றென்றும் தொடர களப்பணியாற்ற வேண்டும் என்றும், நகர்ப்புற உள்ளாட்சியில், நாடே போற்றிடும் வகையில் வெல்வோம், நல்லாட்சியை முன்னெடுத்து செல்வோம்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்