இதுகுறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுத்தியுள்ள கடிதத்தில், "தமிழ்நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளதால், கேரள மாநிலம் காஞ்சிக்கோடு பகுதியில் இருந்து 40 மெட்ரிக் டன் ஆக்சிஜனை அடுத்த 4 நாள்களுக்குள் வழங்க வேண்டும்.
அத்துடன் 20 ஆக்ஸிஜன் கண்டெய்னர்களையும் வழங்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார். முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு பிரதமர் நரேந்திர மோடிக்கு மு.க. ஸ்டாலின் எழுதும் முதல் கடிதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.