ETV Bharat / city

உங்கள் வளர்ச்சியை கண்டு பெருமைப்படும் ஒரு தந்தையாக நான் இருப்பேன்... முதலமைச்சர் உருக்கம்...

author img

By

Published : Jun 25, 2022, 5:40 PM IST

“நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டும் “கல்லூரி கனவு” நிகழ்ச்சியை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

கல்வியை சிறுமை படுத்தி பேசுவோர்களை கண்டுகொள்ளாமல் மாணவர்களே படியுங்கள்

சென்னை: நேரு உள்விளையாட்டு அரங்கில் “கல்லூரி கனவு” நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று(ஜூன் 25) தொடங்கி வைத்தார். அதோடு 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டு மலரை வெளியிட்டார். இவரது முன்னிலையில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகள் 2,500 பேருக்கு பயிற்சி மற்றும் பணி ஆணை வழங்கிடும் வகையில், HCL நிறுவனத்திற்கும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

விரும்பி படித்தால் அனைத்தும் சாதிக்க முடியும்

இந்நிகழ்ச்சியில் தலைமை செயலர், காவல்துறை தலைவர், பள்ளி கல்வித்துறை அமைச்சர், உயர்கல்வித்துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய தலைமை செயலர் இறையன்பு, “நாம், எந்த நோக்கத்திற்காக கல்லூரியில் நுழைகிறோம் என்று மாணவர்கள் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். நோக்கமில்லாமல், இலக்கை அடைய முடியாது. இந்த கல்லூரி கனவு என்ற வழிகாட்டுதல் நிகழ்ச்சி உங்கள் மனதில் உயர்ந்த நோக்கத்தை விதைப்பதற்காக, ஆங்கிலத்தை கற்பது பெரிய விசயமில்லை. வெளிநாட்டவர்கள் தமிழை அவர்கள் மொழியில் மொழி பெயர்த்து கற்று வருகின்றனர்.

ஆகவே நாமும் விரும்பி படித்தால் எதையும் சாதிக்க முடியும். விருப்பமான பாடத்தை தேர்ந்தெடுங்கள். உச்சத்தை தொடலாம். சிறந்த நண்பர்களை தேர்ந்தெடுங்கள், நூல்களை படியுங்கள்” என்றார்.

உங்களை பிள்ளைகளாக நினைத்து வந்துள்ளேன்

இதையடுத்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ”உடல் சோர்வாக இருந்த எனக்கு இந்த நிகழ்ச்சி ஒரு புத்துணர்வை தருகிறது. முதலமைச்சராக மட்டும் நான் இங்கு வரவில்லை. உங்களை பிள்ளைகளாக நினைத்து வந்துள்ளேன். இந்த காலத்து பிள்ளைகள் மிகவும் விவரம் தெரிந்தவர்கள். மாணவர்கள் கையில் உலகம் வந்துள்ளது. இணையத்தை பார்த்து தங்களது படிப்பை, வேலைவாய்ப்பை தெரிந்துகொள்ளும் அளவிற்கு வளர்ந்துள்ளனர். மாணவர்களான நீங்கள் தான் மாநிலத்தின் அறிவு சொத்து.

நான் முதல்வன் என்ற திட்டம் நீங்கள் ஒவ்வொரு துறையிலும் முதல்வராக இருக்க வேண்டும் என்பது தான் நோக்கம். படிப்பு, பண்பு, உள்ளிட்ட அனைத்திலும் மாணவர்களை உயர்த்தும் திட்டம் தான் ”நான் முதல்வன் திட்டம்”. அரசு பள்ளியில் கல்வி பயின்றவர்கள் தான் நாட்டின் உயர்ந்த இடத்தில் இருந்துள்ளனர் என்பதற்கு அப்துல் கலாம், இஸ்ரோ சிவன் ஆகியோர்கள் உதாரணம். கல்வி உரிமையை பெற்றெடுக்க பாடுபட்டவர் பெரியார்.

தமிழ்நாட்டிற்கு இணையான மாநிலம் எதுவும் இல்லை

இந்திய துணை கண்டத்தில் கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலத்தில் தமிழ்நாட்டிற்கு இணையான மாநிலம் எதுவும் இல்லை என்று கூறலாம். பள்ளியில் பயிலுவது போன்றே கல்லூரியிலும் இருந்து விடக்கூடாது. ஏனென்றால் கல்லூரியில் மாணவர்களுக்கான பொறுப்புகள் அதிகமாகி விடும். பொறியியல், மருத்துவம் சிறந்த படிப்புகள்தான். ஆனால் பல்வேறு படிப்புகள், அதற்கான வேலைவாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

மாணவர்களுக்கு பிடித்த பாடத்தை தேர்ந்தெடுங்கள். அதில் அதிக கவனத்தை செலுத்துங்கள். இந்த நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்ட அரங்குகளில் கல்லூரி சார்ந்த அரங்குகள் இருக்கிறது. அதை பார்த்து பயன்பெறுங்கள். இந்தியாவில் 100 கல்லூரிகள் சிறந்தது என்றால் அதில் 30 தமிழ்நாடு கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன. யாருடனும் ஒப்பிடாதீர்கள், தமக்கானதை சிறப்பாக பயிலுங்கள்.

கல்வியை சிறுமைப்படுத்தி பேசுவோர்களை கண்டுகொள்ளாமல் படியுங்கள்

இன்று முதல் புதிய மனிதர்களாக மாறுங்கள். சமுதாயம் உங்களுக்காக வழிவிடும். உங்கள் வளர்ச்சியில் பெருமைப்படும் ஒரு தந்தையாக நான் இருப்பேன். மனிதனின் மாபெரும் சொத்து கல்விதான் அதை யாராலும் திருட முடியாது. அத்தகைய கல்வியை சிறுமை படுத்தி பேசுவோர்களை கண்டுகொள்ளாமல் நீங்கள் படியுங்கள். உலகம் முழுவதும் சிறகடித்து பறந்திடுங்கள், உங்களுக்கு பின்பு வருவோர்களுக்கு வழிகாட்டியாக இருங்கள்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தாக்கரேவுக்கு வழிகாட்டியா எடப்பாடி? - இந்த மாதிரி நேரத்துல வீரனுங்க என்ன செய்வாங்க தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.