ETV Bharat / city

தமிழ்நாட்டில் புதிதாக 20 கல்லூரிகள்: முதலமைச்சர் திறந்து வைப்பு - ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்தார்

புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தொடங்கி வைத்து, உயர்கல்வித் துறையின் சார்பில் 152.01 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அரசு கலைக் கல்லூரிகள்
அரசு கலைக் கல்லூரிகள்
author img

By

Published : Jul 7, 2022, 6:44 PM IST

சென்னை: தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூலை 7) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2021-22 மற்றும் 2022-23ஆம் ஆண்டுகளுக்கான உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கையில் அறிவித்தவாறு 20 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

மேலும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் 152 கோடியே 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகங்கள், தொழில் முனைவோர் மையங்கள், விடுதிகள் உள்ளிட்ட கல்விசார் கட்டடங்களையும் திறந்து வைத்தார். குறிப்பாக, 2022-23ஆம் ஆண்டிற்கான உயர்கல்வித் துறையின் மானியக் கோரிக்கையின் போது,

திருச்சிராப்பள்ளி மாவட்டம் - மணப்பாறை,

விழுப்புரம் மாவட்டம் - செஞ்சி,

கிருஷ்ணகிரி மாவட்டம் - தளி,

புதுக்கோட்டை மாவட்டம் - திருமயம்,

ஈரோடு மாவட்டம் - அந்தியூர்,

கரூர் மாவட்டம் - அரவக்குறிச்சி,

தஞ்சாவூர் மாவட்டம் - திருக்காட்டுப்பள்ளி,

திண்டுக்கல் மாவட்டம் - ரெட்டியார்சத்திரம்,

கடலூர் மாவட்டம் - வடலூர்,

காஞ்சிபுரம் மாவட்டம் - ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் புதியதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன்படி, புதியதாக அறிவிக்கப்பட்ட 20 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2022-2023ஆம் கல்வியாண்டு முதல் மாணவ-மாணவியர்கள் சேர்க்கை பெற்று பயன்பெறும் வகையில், அனைத்து வசதிகளுடன் கூடிய தற்காலிக கட்டடங்களில் 20 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்தார்.

முதலமைச்சர் திறந்து வைப்பு
முதலமைச்சர் திறந்து வைப்பு

சென்னை மாவட்டம், வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் 1 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள் மற்றும் ஆய்வகக் கட்டடங்கள்; சைதாப்பேட்டை, கல்வியியல் மேம்பாட்டு நிறுவன வளாகத்தில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கல்லூரிக் கல்வி இயக்ககம்

சென்னை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்ககத்திற்கான ஒருங்கிணைந்த நிர்வாகக் கட்டடம்

சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரியில் 7 கோடியே 48 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள முதுநிலை மாணவ-மாணவியர்களுக்கான விடுதிக் கட்டடங்கள்

சென்னை பல்கலைக்கழகத்தில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உடற்பயிற்சிக் கூடம்

மேலும், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி – அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி அரசு கலைக் கல்லூரியில் 1 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகக் கட்டடங்கள்

நீலகிரி மாவட்டம், உதகமண்டலம் – அரசு கலைக் கல்லூரியில் 1 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், சேலம் – அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் 1 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், சேலம் – அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 1 கோடியே 14 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் மற்றும் கழிவறைகள்

சேலம் – பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் 9 கோடியே 65 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள திறன் மேம்பாடு, அடைகாப்பு மற்றும் தொழில் முனைவோர் மையங்கள், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கட்டடங்கள், மாணவ-மாணவியர்களுக்கான விடுதிக் கட்டடங்கள் மற்றும் இதர கட்டடங்கள்

திருச்சிராப்பள்ளி – பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் 12 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அறிவியல் கருவியாக்க மையம் (Scientific Instrumentation Centre), தொழில் முனைவோர் புதுமை மையம், கலையரங்கம் கல்விசார் மற்றும் நிர்வாகக் கட்டடங்கள்

அரியலூர் – அரசு கலைக் கல்லூரியில் 5 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், மயிலாடுதுறை – தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 3 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்,

கடலூர் மாவட்டம், சிதம்பரம் – அரசு கலைக் கல்லூரியில் 2 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்,

திருவாரூர் மாவட்டம் – திருவாரூர், திரு.வி.க அரசு கலைக் கல்லூரியில் 4 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்,

சிவகங்கை மாவட்டம், பூலாங்குறிச்சி- வ.செ.சிவ அரசு கலைக் கல்லூரியில் 3 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்,

காரைக்குடி - அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் 1 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்,

சிவகங்கை - அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும்,

சிவகங்கை – இராஜா துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் 1 கோடியே 14 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள் மற்றும் ஆய்வகக் கட்டடங்கள்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி – அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 5 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மகளிர் விடுதிக் கட்டடம் என மொத்தம் 152 கோடியே 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்கல்வித்துறை கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இதையும் படிங்க: ‘சென்னையில் தோனியின் ஆட்டத்தை காண காத்திருக்கிறேன்’ - முதலமைச்சர் ஸ்டாலின் ட்வீட்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.