ETV Bharat / city

நாசாவின் பெர்சிவெரென்ஸ் ரோவரின் வழிநடத்தும் குழுவின் தலைவருக்கு முக ஸ்டாலின் வாழ்த்து! - அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் செய்திகள்

சென்னை: நாசாவின் பெர்சிவெரென்ஸ் ரோவரின் வழிநடத்தும் குழுவின் தலைவர் ஸ்வாதி மோகனுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முக ஸ்டாலின் வாழ்த்து ட்வீட்
முக ஸ்டாலின் வாழ்த்து ட்வீட்
author img

By

Published : Feb 19, 2021, 9:04 PM IST

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சிக் கழகமான நாசா, செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான சாத்தியக் கூறுகளை ஆராயும் பணியை மேற்கொண்டுள்ளது.

அதன்படி, நாசாவின் பெர்சிவெரென்ஸ் ரோவர் ஜி.எம்.டி நேரப்படி சரியாக நேற்றிரவு (பிப்.18), செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது. செவ்வாயின் மேற்பரப்பிலிருந்து புதிய ரோவர் எடுத்த முதல் புகைப்படத்தையும் பெர்சிவெரென்ஸ் ரோவர் அனுப்பியுள்ளது.

இந்த ரோவர் செவ்வாயின் மேற்பரப்பை வெற்றிகரமாக அடைந்த செய்தியை நாசா புரொபல்சன் லேபரேட்டரி வழிநடத்தும் குழு தலைவர் ஸ்வாதி மோகன் உறுதி செய்தார். ஸ்வாதி இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முக ஸ்டாலின் வாழ்த்து ட்வீட்
முக ஸ்டாலின் வாழ்த்து ட்வீட்

இந்நிலையில், ஸ்வாதி மோகனுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில், "நாசாவின் பெர்சிவெரென்ஸ் ரோவரின் வழிநடத்தும் குழுவின் தலைவர் ஸ்வாதி மோகனுக்கு வாழ்த்துகள். நாசா ஜே.பி.எல் மற்றும் அதன் அறிவியலாளர்கள் அறிவியலின் புதிய எல்லைகளைக் கடந்து, நமது அறிவின் பரப்பை விரிவாக்கம் செய்வதைக் கண்டு வியப்படைகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க...பயண களைப்பு: வண்டியை நிறுத்தி ரோட்டோரக் கடைக்குச் சென்று டீ குடித்த எடப்பாடி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.