தேசிய தடகளப் போட்டியில் 200 மீ ஓட்டத்தில் தமிழ்நாடு வீராங்கனை தனலட்சுமி வெள்ளிப் பதக்கம் வென்றார். 100 மீ ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்ற நிலையில் 200 மீ ஓட்டத்தில் தனலட்சுமி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இந்நிலையில் தமிழ்நாடு வீராங்கனை தனலட்சுமிக்கு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
அதில், “விளையாட்டு வானில் மீண்டும் ஒரு தமிழ்நாடு நட்சத்திரம்! தடகளப் போட்டிகளில் சாதனை மங்கையாக விளங்கும் திருச்சியைச் சேர்ந்த தனலட்சுமிக்கு வாழ்த்துகள். மின்னலென ஓடும் அவரது சாதனைச் சிறகுகள், அவரை மேலும் பல உயரங்களுக்கு அழைத்துச் செல்லட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க...வங்கதேசத்தை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி!