ETV Bharat / city

’திமுக தேறாத கட்சி’ - அமைச்சர் ஜெயக்குமார் சாடல் - அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: திமுக ஒரு தேறாத கட்சி என்பதால் காங்கிரஸ் திமுகவிடம் தொகுதி பேரம் பேசவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

meet
meet
author img

By

Published : Nov 18, 2020, 2:56 PM IST

Updated : Nov 18, 2020, 3:19 PM IST

சென்னை மாநகராட்சியில் உள்ள அம்மா மாளிகையில் இன்று, வடகிழக்கு பருவமழைக்கால தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின், மாவட்ட ஆட்சியர் சீதா லட்சுமி, மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்திற்குப் பின்னர், அமைச்சர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, " 12 மாவட்டங்களில் இயல்பாகவும், 24 மாவட்டங்களில் இயல்பை விட குறைவாகவும் மழை பொழிந்துள்ளது. சென்னையில் மழை அதிகமாக பெய்தாலும், மூன்று மணி நேரத்தில் மழைநீர் வடிகால் வழியாக சென்று விடும் அளவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் நகரில் தண்ணீர் தேங்குவது குறைந்துள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியில் 80% நீர் நிரம்பியுள்ளது. முழு கொள்ளளவை எட்டினாலும் அணை பலமாகவே உள்ளது. மாநகருக்கு எந்த பிரச்சனையும் இன்றி உபரி நீர் பாதுகாப்பாக வெளியேற்றப்படும். எல்லா ஏரிகளிலும் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். தூத்துக்குடியில் மழைக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளனர்.

முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று ஆந்திர அரசு கிருஷ்ணா நதியில் அதிக தண்ணீர் திறந்துள்ளது. இதனால் இதுவரை சென்னையில் நாளொன்றுக்கு 700 எம்எல்டி தண்ணீர் மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில், நாளைமுதல் 750 எம்எல்டி தண்ணீர் வழங்கப்படும். மருத்துவக் கழிவுகளை மாநகராட்சி குப்பை தொட்டிகளில் கொட்டும் மருத்துவமனைகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் " எனக் கூறினார்.

’திமுக தேறாத கட்சி’ - அமைச்சர் ஜெயக்குமார் சாடல்

திமுகவுடன் தொகுதி பேரத்தில் ஈடுபட மாட்டோம் என்ற காங்கிரஸ் கட்சியின் கருத்து குறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “ ஓடும் குதிரை மேல் தான் பந்தயம் கட்டுவார்கள். ஓடாத குதிரை மீது எப்படி பந்தயம் கட்டுவார்கள்? திமுக தேறாத கட்சி என்பதால் காங்கிரஸ் திமுகவிடம் தொகுதி பேரம் பேசவில்லை " என்று விமர்சித்தார்.

இதையும் படிங்க: வடகிழக்கு பருவமழை: வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை-அமைச்சர் உதயகுமார்

Last Updated : Nov 18, 2020, 3:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.