ETV Bharat / city

வெங்காய விலையை கட்டுப்படுத்த அமைச்சர்கள் முடிவு - வெங்காய விலை கட்டுப்படுத்த நடவடிக்கை

சென்னை: வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்துவது தொடர்பாக உணவுத் துறை அமைச்சர், கூட்டுறவுத் துறை அமைச்சர் ஆகியோர் தலைமைச் செயலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

minister kamaraj
author img

By

Published : Sep 23, 2019, 10:46 PM IST

அன்றாடம் உணவில் சேர்க்கப்படும் வெங்காயம் ஒரு அத்தியாவசிய சமையல் பொருளாக உள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக இந்த வெங்காயத்தின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து காணப்படுகிறது. காரணம் இந்தியாவில் அதிகமாக வெங்காயம் உற்பத்தி செய்யப்படும் மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்த கனமழையால் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டது.

இதன் காரணமாக தமிழ்நாட்டில் வெங்காயத்தின் இறக்குமதி குறைந்ததையடுத்து, கடந்த ஒரு வார காலமாக வெங்காயத்தின் விலை அதிகரித்தே காணப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெங்காயம் 50 ரூபாய்க்கு மேல் விற்பனை ஆவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இது பண்டிகை காலம் என்பதால் நடுத்தர வர்க்கத்தினர் அவதி அடைந்துள்ளனர்.

இதனால் வெங்காய விலையை குறைக்கும் பொருட்டு உணவுப்பொருள் மற்றும் நுகர்வோர் துறை அமைச்சர் காமராஜ், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆகியோர் அத்துறைகளின் அலுவலர்களுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இதில் வெங்காய விலையை கட்டுப்படுத்தும் பொருட்டு கூட்டுறவு சங்கங்கள் மூலம் வெங்காயம் உள்ளிட்ட உணவு பொருட்களை விற்பனை செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. எனவே வெங்காய விலை குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Intro:Body:வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்து து தொடர்பாக உணவுத்துறை அமைச்சர் மற்றும் கூட்டுறவு துறை அமைச்சர் ஆகியோர் தலைமைச் செயலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

உணவில் சேர்க்கப்படும் வெங்காயம் தமிழ்நாடு மட்டுமல்லாது மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் வெங்காயம் விளையும் பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் உற்பத்தி குறைந்து வரத்தும் குறைந்துள்ளது. இதனால் கடந்த ஒரு வார காலமாக வெங்காயத்தின் விலை ஏருமுகமாகவே உள்ளது. தமிழகத்தில் ஒரு கிலோ வெங்காயம் 50 ரூபாய்க்கு மேல் விற்பனை ஆவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. மேலும் இது பண்டிகை காலம் என்பதால் நடுத்தர வர்க்கத்தினர் அவதி அடைந்துள்ளனர்.

இதனால் வெங்காய விலையை குறைக்கும் பொருட்டு உணவுப்பொருள் மற்றும் நுகர்வோர் துறை அமைச்சர் காமராஜ், கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் அத்துறை அதிகாரிகள் தலைமை செயலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இதில் வெங்காய விலையை கட்டுப்படுத்தும் பொருட்டு கூட்டுறவு சங்கங்கள் மூலம் வெங்காயம் உள்ளிட்ட உணவு பொருட்களை கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்கலாம் என்பது குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

Visual sent by WhatsAppConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.