ETV Bharat / city

3 லட்சத்திற்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்ட  நடத்துநருக்கு அமைச்சர் பாராட்டு - conductor marimuthu yoganathan

சென்னை: 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு, பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நடத்துநர் மாரிமுத்து யோகநாதானுக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பாராட்டு தெரிவித்துள்ளார்.

minister-sp-velumani-appreciate-to-coimbatore-conductor-marimuthu-yoganathan

author img

By

Published : Mar 7, 2021, 4:09 PM IST

கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த நடத்துநர் மாரிமுத்து யோகநாதான், சுற்றுசூழலை பாதுகாக்கும் உயரிய நோக்கோடு 30 ஆண்டுகளில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் அவர், தான் நடத்துநராகப் பணிபுரியும் பேருந்தில் பயணிப்பவர்களுக்கும் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கி மரம் நடுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார்.

minister-sp-velumani-appreciate-to-coimbatore-conductor-marimuthu-yoganathan
அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ட்வீட்

அவரின் இந்தச் சேவைக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்துவருகின்றனர். அதைத்தொடர்ந்து உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ட்விட்டரில் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்வீட் செய்துள்ள அவர், "சுற்றுச்சூழலை பாதுகாக்க 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டும், இலவசமாக மரக்கன்றுகள் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நடத்துநர் மாரிமுத்து யோகநாதான் சேவையை மனதார பாராட்டி வாழ்த்துகின்றேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில்தான் ஊராட்சி சாலைகள் சிறப்பாக மேம்படுத்தப்பட்டுள்ளன -அமைச்சர் எஸ்பி வேலுமணி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.