ETV Bharat / city

அமைச்சர் கருப்பணனுக்கு ’டங் சிலிப்’ - சொல்கிறார் செல்லூரார்!

சென்னை: உள்ளாட்சியில் திமுக வென்ற இடங்களுக்கு குறைவாக நிதி ஒதுக்குவோம் என அமைச்சர் கருப்பணன் ’tounge slip' ஆகி கூறியிருப்பார் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு கருத்து தெரிவித்துள்ளார்.

sellur raju
sellur raju
author img

By

Published : Jan 29, 2020, 3:06 PM IST

கீழ்ப்பாக்கத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் கூட்டுறவுத் துறைத் துறை சார்ந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத் துறைத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு, “இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை துறை சார்ந்த நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கும் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கூட்டுறவுத் துறையின் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கடந்த மாதம் இரண்டு கோடியே 30 ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. 98.91 விழுக்காடு மக்கள் இதனால் பயனடைந்துள்ளனர். அதேபோன்று வெங்காய விலையையும் தற்போது குறைத்துள்ளோம். முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் ஒரு விவசாயி என்பதால், விவசாயிகளின் பிரச்னையை உணர்ந்து தற்போது விவசாயக் கடன் 10 ஆயிரம் கோடி என அறிவித்துள்ளார். அதேபோன்று கடந்த மூன்று ஆண்டுகளில், திமுகவின் மொத்த ஆட்சியில் வழங்கியதைவிட அதிகமான கடனை விவசாயத்திற்கு வழங்கியுள்ளோம்” என்றார்.

உள்ளாட்சியில் திமுக வென்ற இடங்களுக்கு குறைவாக நிதி ஒதுக்குவோம் என்று அமைச்சர் கருப்பணன் கூறிய கருத்துக்கு பதிலளித்த அவர், அதனை அமைச்சர் tounge slip ஆகி தவறாகக் கூறி இருப்பார் என்றும் உள்ளாட்சி வளர்ச்சிக்கு நிதியை மத்திய அரசு நேராக ஒதுக்கிவருவதால், அதில் மாநில அரசு செய்வதற்கு ஒன்றுமில்லை எனவும் விளக்கினார்.

அமைச்சர் கருப்பணனுக்கு ’டங் சிலிப்’

தமிழ்நாடு சிறந்த மாநிலம் என்று விருதளித்தவர்களை அடிக்க வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் கூறிய கருத்துக்கு பதிலளித்த அமைச்சர் செல்லூர் ராஜு, முதலமைச்சர் பதவியில் எடப்பாடி பழனிசாமி இருப்பதை ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றார். பதவி வெறி உச்சத்தை அடைந்து ஸ்டாலின் இப்படி பேசிவருவதாகவும், பத்தாம்பசலித்தனமாக பேசுவதாக திமுகவினரே நினைக்கும் அளவிற்கு பேசிவருகிறார் என்றும் செல்லூர் ராஜு கூறினார்.

இதையும் படிங்க: திமுக வென்றுள்ள ஊராட்சி ஒன்றியங்களுக்கு குறைந்த நிதியே ஒதுக்கப்படும் - அமைச்சரின் பேச்சால் சர்ச்சை!

Intro:Body:https://we.tl/t-p4fv3CUFuL

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் கூட்டுறவுத்துறை துறை சார்ந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு,

இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை துறை சார்ந்த நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க கூடிய கூட்டம் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்தில் கூட்டுறவு துறையின் திட்டங்கள் குறித்து விவாதிக்க பட்டது என்று கூறினார்.

கடந்த மாதம் 2 கொடி 30 ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு வழங்க பட்டது அதில் எந்த ஒரு பிரச்சினை இல்லாமல் நடைபெற்றது .98.91% மக்களுக்கு இந்த பொங்கல் பரிசு வழங்கி உள்ளோம், அதே போன்று வெங்காய விலை குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன நாங்கள் ஜனவரி மாதம் முன்பாக குறையும் என்று கூறினோம் அதே போன்று தற்போது குறைத்து உள்ளோம் .

முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவர் என்பதால் விவசாயிகளின் பிரச்சினையை உடனே உணர்ந்து தற்போது விவசாய கடன் 10 ஆயிரம் கோடி அறிவித்து உள்ளார், கடந்த மூன்று ஆண்டுகளில் 23 ஆயிரம் கொடி ரூபாய் வழங்கி உள்ளார் அதே போன்று நாங்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் திமுக மொத்த ஆட்சியில் வழங்கியதை விட அதிகமான கடனை விவசாயத்திற்கு வழங்கி உள்ளோம் என்றும் ,அதிமுக மக்களுக்கான அரசு என்று கூறினார்.

மழை நீர் சேகரிப்பு திட்டத்தை முதன் முதலில் ஜெயலலிதா அவர்கள் கொண்டு வந்தார் தற்போது இந்தியா முழுவதும் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கூறி உள்ளார்.இப்படி அனைத்து துறைகளிலும் அதிமுக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று கூறினார்.

திமுக வென்ற இடங்களுக்கு குறைவாக நிதி ஒதுகுவோம் என்று அமைச்சர் கருப்பணன் கூறிய கருத்துக்கு பதில் அளித்த அவர்;

அதனை அமைச்சர் tounge slip ஆகி தவறாக கூறி இருப்பார் ,உள்ளாட்சி வளர்ச்சிக்கு நிதியை மத்திய அரசு நேராக ஒதுக்கி வருகிறது எனவே அதில் மாநில அரசு செய்வதற்கு ஒன்றும் இல்லை என்றும் அதனை அவர் கூறி இருந்தாலும் தவறு என்று கூறினார்.

தமிழகம் சிறந்த மாநிலம் என்று விருது அளித்த நபர்களை அடிக்க வேண்டும் என்று ஸ்டாலின் கூறிய கருத்துக்கு பதில் அளித்த அவர்:

முதல்வர் பதவியில் எடப்பாடி பழனிசாமி இருப்பதை ஸ்டாலின் அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை பதவி வெறி உச்சத்தை அடைந்து ஸ்டாலின் இப்படி பேசி வருகிறார் என்றும் ,தனி நபருக்கு குடுத்த விருதுக்கு பெருமை பேசி வந்த அவர் தற்போது துறை சார்ந்து அனைத்து மாநிலங்களையும் ஒப்பிட்டு மத்திய அரசு குடுத்த விருதுக்கு ஸ்டாலின் இப்படி பேசுவது பத்தாம் பசலி தனமாக பேசி வருகிறார் என்று அவர் கட்சியை சார்ந்தவர்களே நினைக்கும் அளவிற்கு ஸ்டாலின் பேசி வருகிறார் என்று கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.