திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வாகன வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.
இதற்குப் பதிலளித்து பேசிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, "திருப்பரங்குன்றம் கோயிலுக்கு சொந்தமான காலியான நிலமும், திருக்குளமும், அங்குள்ள தை கார்த்திகை அறக்கட்டளைக்கு சொந்தம் என 1991ஆம் பல்வேறு வழக்கு உள்ளது. மேலும் பல்வேறு வழக்குகள் திருக்கோயிலுக்கு சாதகமாகவும் சில வழக்குகள் அறக்கட்டளைக்கு சாதகமாகவும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளன.
2016ஆம் ஆண்டு மதுரை நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை துரிதப்படுத்தி முடித்து, வாகன நிறுத்தத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் கூறி இருக்கிறார். மேலும் இந்த கோயிலுக்கு 12 பணிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், கடந்த 10 ஆண்டுகள் காலம் செய்ய முடியாத பணிகளையும் செய்து முடிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இந்தப் பணிகள் அனைத்தும், இந்த மானியக் கோரிக்கையில் இடம்பெறும். மேலும் ஏற்கெனவே பக்தர்கள் வருவதற்கும், தங்குவதற்கும் தேவையான அளவு தரிசனம் செய்வதற்கும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம்: அமைச்சர் மெய்யநாதன்