ETV Bharat / city

‘எதையும் தாங்கும் முதலமைச்சர் பழனிசாமி’ -  நிலோபர் கபில் - உள்ளாட்சி தேர்தல் குறித்து அமைச்சர் நிலோபர் கபில் பேச்சு

சென்னை: முதலமைச்சர் பழனிசாமி எந்த தேர்தலாக இருந்தாலும் அதை சந்திக்க தயாராக உள்ளதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்தார்.

z
அமைச்சர் நிலோபர் கபில்
author img

By

Published : Nov 30, 2019, 2:22 PM IST

Updated : Nov 30, 2019, 7:41 PM IST

சென்னை நுங்கம்பாக்கதில் உள்ள தனியார் விடுதியில் பிரதம மந்திரியின் தொழிலாளர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் அமைப்பு சாராதொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகர்களுக்கு ஓய்வூதிய அட்டைகள் வழங்கும் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை செயலர் நஜிமுதீன், தொழிலாளர் ஆணைய செயலர் நந்தகோபால் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், கடந்த மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி 5 லட்சம் நபர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று அறிவித்ததின் அடிப்படையில் அமைப்பு சாரா தொழிளாலர்களுக்கு ஓய்வுதியம் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

நிலோபர் கபில் செய்தியாளர் சந்திப்பு!

தொடர்ந்து பேசிய அவர், முதலமைச்சர் பழனிசாமி எந்த தேர்தலாக இருந்தாலும் அதை சந்திக்க தயாராக உள்ளதாகவும் நாளை உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றாலும் அதை அதிமுக சந்திக்க தயாராக உள்ளதாகவும், மக்களிடம் ஸ்டாலின் பொய் பிரசாரம் செய்து வருகிறார் என்றும் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதால் அதற்கு பயந்து அதிமுகவை பற்றி அவர் அவதூறாகப் பேசி வருகிறார் எனவும் கூறினார்.

Intro:Body:ஸ்டாலின் தோல்வி பயத்தால் தான் அதிமுக வை விமர்சனம் செய்வதாகவும், நாளையே உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டாலும் அதனை சந்திக்க அதிமுக தயாராக உள்ளதாகவும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் திட்டவட்டமாக தெரிவித்தார்.

பிரதம மந்திரியின் தொழிலாளர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் அமைப்பு சாராதொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகர்களுக்கு ஓய்வூதிய அட்டைகள் வழங்கும் விழா சென்னை நுங்கம்பாக்கதில் உள்ள தனியார் விடுதியில் நடைப்பெற்றது. இதில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை செயலர் நஜிமுதீன், தொழிலாளர் ஆணைய செயலர் நந்தகோபால் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.

அமைச்சர் நிலோபர் கபில் விழாவில் பேசுகையில்,

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

60 வயதிற்கு பின் மாதம் தோறும் 3000 ரூபாய் வழங்கப்படும்.

இந்த திட்டத்தில் பதிவு செய்ய 15000 கீழ் சம்பளம் இருக்க வேண்டும்.

இதுவரை 53471 தொழிலாளர்கள் இந்த அமைப்பு சாரா திட்டத்தில் பதிவு செய்துள்ளனர்.

இதுவரை 210 வியாபாரிகளும் இந்த திட்டத்தில் பதிவு செய்துள்ளனர் என்றார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தொழில்துறை அமைச்சர் நிலோபர் கபில்,

மத்திய அரசின் அமைப்பி சாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் விழா நடைப்பெற்றது என்றும் கடந்த மாதம் தமிழக முதல்வர் 5 லட்சம் நபர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று அறிவித்ததாகவும் அதன் படி தான் வழங்கப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.

மேலும், வருடத்திற்கு 1 கோடி 50 லட்சத்திற்குள் வியாபாரம் செய்யும் வணிகர்கள் இதில் பதிவு செய்தால் 60 வயதிற்கு பின் 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஸ்டாலின் விமர்சனம் தொடர்பான கேள்விக்கு...எந்த தேர்தலாக இருந்தாலும் அதை சந்திக்க தயாராக உள்ளதாக தமிழக முதல்வர் கூறியுள்ளதாகவும், நாளை உள்ளாட்சி தேர்தல் நடைப்பெற்றாலும் அதை அதிமுக சந்திக்க தயாராக உள்ளதாகவும்,
மக்கள் ஸ்டாலின் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார் என்று அறிந்துவிட்டதால் தான் நாங்குநேரி , விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது என்றும் அந்த பயத்தில் தான் அதிமுக வை பற்றி அவர் அவதூராக பேசி வருகிறார் என்றும் அவர் கூறினார்.Conclusion:
Last Updated : Nov 30, 2019, 7:41 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.