ETV Bharat / city

’ரஜினிக்கு முன்பு நாங்கள்தான்’ - அமைச்சர் ஜெயக்குமார் பிடிவாதம்! - அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: நடிகர் ரஜினிகாந்திற்கு முன்பே குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்த இயக்கம் அதிமுக என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

jayakumar
jayakumar
author img

By

Published : Feb 5, 2020, 4:56 PM IST

ராயபுரம் பகுதியில் தான் பயின்ற பள்ளியில் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பினை தொடங்கி வைத்த அமைச்சர் ஜெயக்குமார், மாணவர்களுக்கு ஸ்மார்ட் கிளாஸ் முறையில் பாடத்தையும் எடுத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “ குடியுரிமைச் சட்டத்திற்கு ரஜினிக்கு முன்பே எங்கள் ஆதரவை தெரிவித்துவிட்டோம். சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக ரஜினிகாந்த் இப்போதுதான் பேசுகிறார். ஆனால் அதிமுக என்றோ பேசிவிட்டது. இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என்பதும் அதிமுகவின் நிலைப்பாடுதான்.

’ரஜினிக்கு முன்பு நாங்கள்தான்’ - அமைச்சர் ஜெயக்குமார் பிடிவாதம்!

திமுக கார்ப்பரேட் கட்சியாகிவிட்டது. எவ்வளவு செலவு செய்தாலும் திமுக நினைப்பது தமிழ்நாட்டில் நடக்காது. குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக, என் மீது அவதூறு பரப்பும் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் விரைவில் நீதிமன்றத்தில் பதில் கூற வேண்டியிருக்கும் “ எனக் கூறினார்.

மேலும், அமைச்சரவைக் கூட்டத்தில் ராஜேந்திர பாலாஜியை அமைச்சர்கள் அனைவரும் கண்டித்ததாக வரும் தகவல் குறித்தக் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், அமைச்சரவைக் கூட்டத்தில் நடந்ததையெல்லாம் வெளியில் கூற முடியாது என்றார்.

இதையும் படிங்க: 'இஸ்லாமியர்களுக்குப் பாதிப்பு என்றால் முதல் ஆளாக குரல் கொடுப்பேன்' - ரஜினிகாந்த்

Intro:அமைச்சர் ஜெயகுமார் பேட்டிBody:சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் முன்னாள் மாணவராக இருந்த அமைச்சர் ஜெயக்குமார் தான் பயின்ற பள்ளியில் மாணவர்களுக்கு தேவைப்படும் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பினை திறந்து வைத்தார்.
பின்னர் மாணவர்களிடம் தன்னுடைய வாழ்கைமுறையை பதிவு செய்து மாணவர்கள் மத்தியில் ஸ்மார்ட் கிளாஸ் பாடம் எடுத்தார்..

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;

ரஜினியின் கருத்து அவரது தனிப்பட்ட கருத்து. ஆனால் அவருக்கு முன்னதாகவே சிசிஏ விற்கான எங்கள் ஆதரவை தெரிவித்துவிட்டோம்.
சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக ரஜினிகாந்த் இப்போது தான் பேசுகிறார். ஆனால் அதிமுக என்றோ பேசி விட்டது.

திமுக கார்ப்பரேட் கட்சி ஆகி விட்டது.
எவ்வளவு செலவு செய்தாலும் திமுக நினைப்பது தமிழகத்தில் நடக்காது.

இலங்கை தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என்பதும் அதிமுகவின் நிலைப்பாடு தான்.

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைக்கேடு தொடர்பாக என் மீது அவதூறு பரப்புபவர்கள் விரைவில் நீதிமன்றத்தில் பதில் கூற வேண்டியிருக்கும். தயாநிதி மாறன் உள்ளிட்டோர் என் மீது அவதூறு பரப்பி வருகின்றனர்.

மேலும் கேபினெட் கூட்டத்தில் ராஜேந்திர பாலாஜியை அமைச்சர்கள் அனைவரும் கண்டித்ததாக தகவல் என்ற கேள்விக்கு

கேபினெட்டில் நடந்ததையெல்லாம் வெளியில் கூற முடியாது என்று கூறினார்.Conclusion:அமைச்சர் ஜெயகுமார் பேட்டி
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.