ETV Bharat / city

மாணவர்களின் ஒரு உயிரைக் கூட இனி இழக்க கூடாது - அன்பில் மகேஷ் பொய்யாமொழி

author img

By

Published : Jul 27, 2022, 4:44 PM IST

மாணவர்களின் ஒரு உயிரைக் கூட இனி இழக்காமல் இருப்பதுதான் முதலமைச்சருக்கு தாங்கள் செய்யும் மரியாதையாக அமையும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

மாணவர்களின் ஒரு உயிரைக் கூட இனி இழக்காமல்...- அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு

சென்னை: அசோக் நகர், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் “பள்ளி மாணவர்களுக்கான மனநலம், உடல்நலம் சார்ந்த விழிப்புணர்வு" நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டார்.

அப்போது அவர் பேசும்போது, "மாணவர்களின் ஒரு உயிரைக் கூட இனி இழக்காமல் இருப்பதுதான் முதலமைச்சருக்கு நாங்கள் செய்யும் மரியாதையாக அமையும். துறையின் அமைச்சராக இறுக்கமான சூழலில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறேன்.

கரோனாவில் இருந்து முதலமைச்சர் மீண்டு வந்தாலும், அவருக்கு இன்னும் உடல் சோர்வு இருக்கிறது. ஆனால் சில செய்திகள் தனக்கு உளச் சோர்வு தருவமாகவும் , அதற்கு தீர்வு காணும் விதமாக ஓய்வு எடுக்காமல் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாகவும் கூறினார். மாணவர்களுக்கு அறிவு , உடல் , மனம் மூன்றும் ஒரே நேர் கோட்டில் இருக்க வேண்டும். விடுதி மாணவர்களுக்கு வீட்டு ஞாபகம் இருக்கிறது.

கள்ளக்குறிச்சியில் இறந்த ஒரு மாணவியால், 3,000 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என நான் கூறியவுடன், உனது 2 மகனில் ஒரு மகன் இறந்தால் என்ன செய்வாய், வருத்தப்படாமல் இருப்பாயா? என்று கேட்கிறார்கள். ஆனால் இறந்த குழந்தையை போல 3 ஆயிரம் குழந்தைகளும் எனது குழந்தைகள் போலதான் எனக்கு தெரிகிறது. இந்த விஷயத்தில் தொடர்ந்து விமர்சனங்களை வைக்கின்றனர்.

பள்ளிக்கல்வித்துறையில் தமிழ்நாடு முழுவதும் 413 ஒன்றியங்களாக பிரித்துள்ளோம். அந்த ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு மனநல ஆலோசனையை ஒரு மாதத்திற்கு ஒரு முறை வழங்கப்படும். ஆனால் தற்பொழுது ஒவ்வொரு பள்ளிக்கும் 3 மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவர்கள் செல்வார்கள்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: உதவித்தொகை கேட்ட முதியவர், உடனடியாக நடவடிக்கை எடுத்த முதலமைச்சர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.