சென்னை: சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் இருந்து மீன்வளம், மீனவர் நலன், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சட்டப்பேரவை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள காலை 9.15 மணிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் மோதிக்கொண்டனர். இதில் குமார் என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதனைப் பார்த்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தனது வாகனத்தில் ஏற்றி ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்த்துள்ளார்.
மேலும் அவருக்கு நன்றாக சிகிச்சை அளிக்கும்படி, மருத்துவமனை முதல்வரிடம் கூறியதுடன், காயமுற்றவருக்கு நிதியுதவியும் வழங்கி உள்ளார்.
இதையும் படிங்க: Video: உரிய பாதுகாப்பு இன்றி சாக்கடையைச் சுத்தம் செய்யும் தூய்மைப் பணியாளர்!