ETV Bharat / city

ஆன்லைன் விசாரணையில் பெண்ணிடம் ஒழுங்கீனம்... வழக்கறிஞருக்கு சிறை தண்டனை... - mhc advocate erotic act

ஆன்லைன் விசாரணையின் போது பெண்ணிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட வழக்கறிஞருக்கு இரண்டு வாரங்கள் சிறை தண்டனை, 6 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

mhc
mhc
author img

By

Published : Apr 12, 2022, 11:50 AM IST

சென்னை உயர் நீதிமன்ற காணொலி காட்சி விசாரணையின் போது, நீதிபதி முன்னிலையில், கேமரா ஆனில் இருந்தது தெரியாமல் வழக்கறிஞர் ஒருவர், பெண்ணுடன் ஒழுங்கீனமாக நடந்து கொண்டார். இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது.

இந்த விவகாரத்தை நீதிமன்ற அவமதிப்பு வழக்காக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த நீதிபதிகள் பி.என் பிரகாஷ் அமர்வு, சம்மந்தப்பட்ட வழக்கறிஞருக்கு தொழில் செய்ய தடை வேண்டும் என்று பார் கவுன்சிலுக்கு பரிந்துரைத்துள்ளதோடு, சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

குறிப்பாக வீடியோ காட்சிகளை சமூக வலைத்தளங்களிலிருந்து நீக்க காவல்துறைக்கு உத்தரவிட்டது. இந்த வழக்கு இன்று (ஏப். 12) நீதிபதிகள் பிரகாஷ், நக்கீரன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், வழக்கறிஞருக்கு இரண்டு வாரங்கள் சிறை தண்டனையும், 6 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது.

ஏற்கனவே வழக்கறிஞர், 34 நாள்களாக சிறை தண்டனை அனுபவித்துள்ளதால், தண்டனையை கழித்துக்கொள்ளலாம். இந்த வழக்கில் உடனடியாக நடவடிக்கை எடுத்த சிபிசிஐடிக்கு பாராட்டை தெரிவிக்கிறோம்" எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு... சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் நேரில் ஆஜர்...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.