சென்னை: இலங்கை அதிபருக்கு எதிர்ப்பு தெரிவித்து, 2014ஆம் ஆண்டு சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு, சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.
இந்நிலையில், தங்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி மாணவர்கள் 11 பேர் தாக்கல் செய்த மனு, நீதிபதி சதீஷ்குமார் முன் இன்று (ஆக.6) விசாரணைக்கு வந்தது. அப்போது மாணவர்கள் ஜனநாயக ரீதியக மட்டுமே போரட்டத்தில் ஈடுப்பட்டதாக அவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து, நீதிபதி சதீஷ்குமார், 5 பேருக்கு மேல் ஓரிடத்தில் கூடி சட்ட நடவடிக்கையை தடுத்தல், குற்ற நடவடிக்கைகளை செய்தல் ஆகியவையே சட்ட விரோதமான கூடுதல் என்று கருத முடியும்.
இந்த நோக்கங்கள் இல்லாமல் பொது வெளியில் 5 பேருக்கு மேல் கூடுவதை சட்ட விரோதமாக கூடுவது என்று கருத முடியாது. ஆகவே ஜனநாயக முறையில் போராடுவதை குற்றமாக கருத முடியாது. மாணவர்கள் மீதான வழக்கை ரத்து செய்யப்படுகிறது என உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: சென்னையில் என்ஐஏ தேடுதல் வேட்டை - சிக்கிய இரண்டு புள்ளிகள்!