சென்னை: தமிழ்நாட்டில் குற்றச் சம்பவங்களில் ஈடுபவோரை கண்காணித்து காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதில், அதிகமாக வேலை வாங்கித் தருவதாக கூறி பலரும் பலரிடம் ஏமார்ந்து வருகின்றனர். முக்கியமாக தற்போது நீதிமன்றங்களில் பணியிடங்கள் உள்ளதாக கூறி பலரை மோசடி கும்பல் ஏமாற்றி வருகிறது.
இது குறித்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “சென்னை உயர் நீதிமன்றம், தமிழ்நாடு, புதுவை கிழமை நீதிமன்றங்களில் சில பணியிடங்களுக்கு நேரடி பணி நியமனங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மோசடி கும்பலை நம்ப வேண்டாம்
இதை பயன்படுத்தி வேலைக்காக காத்திருக்கும் நபர்களிடம் சில மோசடி கும்பல் பணியிடங்களை பெற்றுத்தருவதாக கூறி பணம் மோசடியில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது.
இத்தகைய மோசடி கும்பலை யாரும் நம்பி ஏமாற வேண்டாம். நேரடி பணி நியமனங்கள் தகுதியின் அடிப்படையில் மட்டுமே நிரப்பப்படும்.
நீதிமன்றத்தில் பணி வாங்கித் தருவதாக கூறும் நபர்கள் குறித்து சென்னை எழும்பூரிலுள்ள சிபிசிஐடி குற்றப்பிரிவு காவல் துறை இயக்குநரிடம் புகார் அளிக்கலாம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அறங்காவலர் கொலை வழக்கு - ஒருவர் கைது