ETV Bharat / city

அதிமுக உள்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர அனுமதி - case against admk internal election

அதிமுக உள்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிச்சாமி இருவருக்கும் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

mhc-permission-to-challenge-intra-aiadmk-polls

author img

By

Published : Apr 27, 2022, 9:36 AM IST

சென்னை: அதிமுக உள்கட்சி தேர்தலை எதிர்த்து கட்சி உறுப்பினர்கள் ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிச்சாமி இருவரும் சிவில் வழக்கு தாக்கல் செய்ய அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவில், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பின், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன.

இது அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கு எதிரானது. பொதுச்செயலாளரின் அதிகாரங்களை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும். அதோடு நடந்துமுடிந்த உள்கட்சி தேர்தலை ரத்து செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலிருந்து, கட்சியின் உறுப்பினர்களாக இல்லாத மனுதாரர்களுக்கு, இந்த வழக்கை தாக்கல் செய்ய உரிமையில்லை என்பதால், வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன் நேற்று (ஏப்ரல் 26) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் ராம்குமார் ஆதித்தன் தரப்பில், 2,000ஆம் ஆண்டு முதல் கட்சியின் உறுப்பினராக உள்ளதாகவும், உறுப்பினர் அட்டை புதுப்பிக்கப்பட்டு, இன்று வரை உறுப்பினராக உள்ளதாகவும் வாதிடப்பட்டது.

இதற்கு அதிமுக தரப்பில், உறுப்பினர் அட்டையை புதுப்பித்ததாக கூறி மனுதாரர் தாக்கல் செய்த ஆவணம் போலியானது. கட்சியில் ஒரு பிரிவினரை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறும் மனுதாரர், அதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை என்று வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, உண்மையான உறுப்பினர் அட்டையை தாக்கல் செய்ய மனுதாரர் ராம்குமார் ஆதித்தனுக்கு உத்தரவிட்டார். அதோடு அதிமுக உள்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிச்சாமி இருவருக்கும் அனுமதி அளித்து, இருவரும் தொடர்ந்த வழக்கை பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

இதையும் படிங்க: நளினி தடா-வில் தண்டிக்கப்பட்டாரா? பதிவுத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.