சென்னை: ஜெயலலிதாவின் வேதாநிலையத்தை அரசுடமையாக்கியது செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய அனுமதிக்கக் கோரி, அதிமுக வழிகாட்டுதல் குழு உறுப்பினரும், ஜெயலலிதா நினைவு இல்ல அறக்கட்டளை உறுப்பினருமான, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் பரேஷ் உபத்தாயா, சத்திகுமார் சுகுமார் குரூப் அமர்வு முன்பு இன்று (டிசம்பர் 15) விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிமுக தரப்பில், ஆட்சி மாறியதால் தற்போதைய அரசு மேல்முறையீடு செய்யவில்லை என வாதம் முன்வைக்கப்பட்டது.
சாதாரண வழக்கல்ல
எதிர் தரப்பான தீபக், தீபா தரப்பு, "மேல்முறையீடு மனுதாக்கல் செய்ய மனுதாரருக்கு எந்த தகுதியும் இல்லை. சாவி ஒப்படைக்கப்பட்டு, வீட்டை கையகப்படுத்திவிட்டோம் என்பதால் இவ்வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல" என்றனர்.
இருதரப்பு வாதங்களுக்கு பின்னர் நீதிபதிகள், "இது சாதாரண வழக்கு அல்ல. தனி நீதிபதி முன்பு அதிமுக சார்பில் ஏன் மனு தாக்கல் செய்து வாதிடவில்லை" என கேள்வியெழுப்பினர். பின்னர், அதிமுக மேல்முறையீட்டிற்கு செல்ல அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையும் படிங்க: 69 இடங்களில் ரெய்டு: எப்படி சிக்கினார் தங்கமணி - முழு விவரம்