சென்னை: கடந்த பிப்.19ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சிக்கு தேர்தல் நடைபெற்றது. அப்போது, கள்ள ஓட்டு போட முயன்றதாக திமுகவைச் சேர்ந்த நரேஷ்குமார் என்பவரைத் தாக்கி, அரை நிர்வாணமாக்கியதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் மீது தண்டையார்பேட்டை காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அதில், பிப்.20ஆம் தேதி கைதான ஜெயக்குமாருக்கு உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதே வழக்கில் அதிமுக பிரமுகரான ஏ.டி.அரசு என்ற திருநாவுக்கரசு மற்றும் சதீஷ்குமார் உள்ளிட்ட 20 நபர்கள் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
ஒருவருக்கு சென்னை; மற்றவர்களுக்கு பெரியகுளம்: இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று (ஏப்.1) விசாரணைக்கு வந்தபோது, ஏ.டி அரசு என்ற திருநாவுக்கரசு என்பவர் மட்டும் சென்னை வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டுமெனவும், மற்றவர்கள் பெரியகுளத்தில் தங்கியிருந்து 2 வாரங்களுக்கு கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கென பிரத்யேக படுக்கை வசதி