சென்னை மாநகரைத் தூய்மையாகப் பராமரிக்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019-இன்படி, பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பைகளைத் தூக்கி எறிபவர்கள் மற்றும் வாகனங்களிலிருந்து குப்பைகளைக் கொட்டுபவர்களின் மீது ரூ. 500 அபராதமாக் வசூலிக்கப்பட்டு வருகிறது.
மேலும், கட்டுமான கழிவுகளை அங்கீகரிக்கப்படாத பொது இடங்களிலும், சாலைகளிலும் கொட்டுபவர்களின் மீது ஒரு டன் வரை ரூ. 2 ஆயிரம் மற்றும் ஒரு டன்னிற்கு மேல் கொட்டுபவர்களுக்கு ரூ.5 ஆயிரம் என அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
கொப்பை கொட்டினால் அபராதம்
அதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஜனவரி 1ஆம் தேதி முதல் நேற்று முன்தினம் (மார்ச் 18) வரை பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டுமான கழிவுகளைக் கொட்டிய நபர்களுக்கு ரூ. 24.63 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், 'பொதுமக்கள் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பொது இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டுமான கழிவுகளைக் கொட்டுவதைத் தவிர்த்து தூய்மையாகப் பராமரிக்க, முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும். இதனை, மீறும் நபர்களுக்குத் திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019-இன் படி அபராதம் விதிக்கப்படும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'ஏறுனா ரயிலு... இறங்குனா ஜெயிலு...' - ஆசிரியர்களிடம் அத்துமீறிய தேனி மாணவன