அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பின், கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் நிர்வாகிகள் தேர்தல் நடத்தக் கோரி தேர்தல் ஆணையத்துக்கும், அப்போதைய (தற்காலிகம்) பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட சசிகலாவுக்கும் அனுப்பிய மனுவைப் பரிசீலிக்கும்படி உத்தரவிடக் கோரி அதிமுக உறுப்பினர் நல்லபெருமாள் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதிமுக தரப்பு விளக்கம்
இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்தபோது, கட்சியில் பொதுச்செயலாளர் பதவி கலைக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இரு பதவிகளுக்கும் பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், இதைத் தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டதாகவும் அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வழக்கு தள்ளுபடி
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மனுதாரர் கோரிக்கை மனுவைப் பரிசீலிக்கும்படி உத்தரவிட முடியாது’ எனவும், ’இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல’ எனவும் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: விருதுநகர் எம்.எல்.ஏவுக்கு கரோனா - சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்று திரும்பியநிலையில் அதிர்ச்சி