சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டில் மூடிக்கிடக்கும் தக்காளி கிரவுண்டை திறக்க வேண்டும் என்று தந்தை பெரியார் தக்காளி மொத்த வியாபாரிகள் சங்கம் சார்பில் வழக்குத் தொடர்ந்திருந்தது. தக்காளி விலை உச்சத்தில் இருந்தபோது, இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தக்காளிப் பழங்களை ஏற்றி, இறக்க அனுமதியளித்திருந்தது.
பின், அந்த இடத்தை தக்காளி வியாபாரிகளுக்கு நிரந்தரமாக ஒதுக்க மறுத்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தந்தை பெரியார் தக்காளி மொத்த வியாபாரிகள் சங்கம் சார்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை இன்று (ஏப்.20) விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, குறிப்பிட்ட அந்த இடத்தை தக்காளி ஏற்றி இறக்க நிரந்தரமாக கோருவதற்கு மனுதாரர் சங்கத்துக்கு உரிமையில்லை எனக் கூறி, தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்து மேல் முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதையும் படிங்க: கோயம்பேட்டில் தக்காளி வாகனங்களை நிறுத்த நிரந்தர இடம் ஒதுக்க முடியாது!