சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கற்பகம் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு அரசு பள்ளி மாணவ - மாணவியருக்கு இலவச லேப் டாப்கள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த 2020-21ஆம் கல்வியாண்டில் 5 லட்சத்து 32 ஆயிரம் லேப் டாப்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ள நிலையில், மாற்றுத்திறனாளி மாணவ - மாணவியருக்கு லேப்டாப்கள் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
அதனால், மாற்றுத்திறனாளி மாணவ மாணவியருக்கு இலவச லேப்டாப்கள் வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார். இதுதொடர்பாக கடந்த செப்டம்பரில் அரசுக்கு அளித்த மனு பரிசீலிக்கப்படவில்லை எனவும் மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த வழக்கை இன்று (அக்.12) விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, திட்டம் அமலில் இருந்தால் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் இலவச லேப்டாப் வழங்கலாமே.. என அரசுக்கு அறிவுறுத்தி மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: 'கனியாமூர் பள்ளி நிர்வாகிகளின் ஜாமீனை ரத்து செய்யக் கோரிய மனுவை தாமாக முன்வந்து விசாரிக்க முடியாது'