ETV Bharat / city

நாட்டில் இன்னும் வறுமை ஒழிக்கப்படவில்லை - உயர் நீதிமன்றம் வேதனை - MHC

நாடு விடுதலை பெற்று 70 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்னும் வறுமை ஒழிக்கப்படவில்லை எனவும், எப்போது நாட்டின் பொருளாதாரம் 'டேக் ஆஃப்' ஆகும் எனத் தெரியவில்லை என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உயர் நீதிமன்றம் வேதனை
உயர் நீதிமன்றம் வேதனை
author img

By

Published : Jul 14, 2021, 5:27 PM IST

சென்னை: தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறை மேற்கொள்ளும் சாலைப் பணிகள், நடைபாதைப் பணிகள், அரசு அலுவலகங்கள் கட்டுமான பணிகள் ஆகியவற்றின் தரத்தைப் பரிசோதிக்கக் கோரி, சென்னையைச் சேர்ந்த ஸ்ரீகிருஷ்ணா பகவத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வின் முன் இன்று (ஜூலை 14) விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர், அரசு அமைக்கும் சாலைகள் ஆறு மாதங்கள் நீடிப்பதில்லை எனவும், இதை அலுவலர்கள் முறையாக ஆய்வு செய்வதில்லை எனவும் தெரிவித்தார்.

'மக்கள்தான் உஷாரா இருக்கணும்'

இதையடுத்து, மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி, தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், சாலைகள், கட்டடங்கள் கட்டுவது தொடர்பாக விதிகள் உள்ளதாகவும், அவற்றை அமல்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.

சாலைகள் அமைப்பது தொடர்பாக உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கவோ, ஆய்வுசெய்யவோ முடியாது எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், குடிமக்கள் விழிப்புணர்வுடன் அலுவலர்களையும், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளையும் பொறுப்பாக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

விடுதலை பெற்று 70 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்னும் வறுமை ஒழிக்கப்படவில்லை, அடிப்படைக் கல்வி முழுமையாக வழங்கப்படவில்லை என வேதனை தெரிவித்த நீதிபதிகள், இன்னும் நாட்டின் பொருளாதாரம் 'டேக் ஆஃப்' நிலையிலேயே இருப்பதாகவும், எப்போது 'டேக் ஆஃப்' ஆகும் எனத் தெரியவில்லை எனவும் குறிப்பிட்டனர்.

இதையும் படிங்க: ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 11% அகவிலைப்படி உயர்வு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.