ETV Bharat / city

24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை நிறைவு!

சென்னை: தென்னிந்தியாவில் பெரும்பாலும் மழை குறைந்துவிட்டதால், அடுத்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை முற்றிலும் நிறைவுபெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

end
end
author img

By

Published : Jan 9, 2020, 3:45 PM IST

நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில், அதன் இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ” கடந்த 3 மாதங்களாக தென்னிந்தியப் பகுதிகளில் நிலவிய வடகிழக்கு பருவமழை பெரும்பாலும் குறைந்துவிட்டதால், அடுத்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை முற்றிலும் நிறைவுபெறும். வடகிழக்கு பருவமழைக் காலத்தில் தமிழகத்தில் இயல்பைவிட 2 விழுக்காடு அதிக மழைப் பொழிவு பதிவாகியுள்ளது. அதில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 64 விழுக்காடும், ராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் 45 விழுக்காடும், தூத்துக்குடியில் 31 விழுக்காடும், கோவையில் 29 விழுக்காடும், புதுக்கோட்டையில் 27 விழுக்காடும் பதிவாகியுள்ளன.

மேலும், மதுரை, பெரம்பலூர், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் புதுவை ஆகிய பகுதிகளில் சராசரியாக 24 விழுக்காடு குறைவாக மழை பதிவாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலும் வறண்ட வானிலையே காணப்படும். காலை நேரங்களில் பெரும்பாலான மாவட்டங்களில் பனிப்பொழிவு நிலவும் “ எனக் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் இயல்பைவிட 2 விழுக்காடு அதிக மழைப் பொழிவு

இதையும் படிங்க: புதிய வருடத்தின் முதல் பனிப்பொழிவு - காண்போரை கவரும் சிக்கிம்!

Intro:Body:
ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 09.01.20

அடுத்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை முற்றிலும் நிறைவு பெறும்; வானிலை ஆய்வு மைய இயக்குநர் பேட்டி..

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கடந்த 3 மாதங்களாக தென்னிந்திய பகுதிகளில் நிலவிய வடகிழக்கு பருவமழை பெரும்பாலும் குறைந்துவிட்டதால், அடுத்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை முற்றிலும் நிறைவுபெறும் என தெரிவித்தார். மேலும், வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகத்தில் இயல்பைவிட 2 விழுக்காடு அதிக மழை பொழிவு பதிவாகியுள்ளதாகவும், அதில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 64 விழுக்காடும், ராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் 45 விழுக்காடும், தூத்துக்குடியில் 31 விழுக்காடும், கோவையில் 29 விழுக்காடும், புதுக்கோட்டையில் 27 விழுக்காடும் பதிவாகியுள்ளது எனவும் தெரிவித்தார்.

மேலும், மதுரை, பெரம்பலூர், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் புதுவை ஆகிய பகுதிகளில் சராசரியாக 24 விழுக்காடு குறைவாக மழை பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார். அதுமட்டுமல்லாமல் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலும் வறண்ட வானிலை காணப்படும் எனவும் காலை நேரங்களில் பெரும்பாலான மாவட்டங்களில் பனிப் பொழிவு நிலவும் எனவும் அவர் குறிப்பிட்டார்...

tn_che_02_metrology_press_meet_by_puviyarasan_script_7204894
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.