சென்னை: தமிழ்நாட்டில் கரோனா 3-வது அலையை தவிர்ப்பதற்காக தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் இன்று (செப்.12) பெரிய அளவில் நடத்தப்பட்டது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் 40 ஆயிரம் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டன.
ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு கூடங்கள், பள்ளி, கல்லூரிகள், விமான நிலையம், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு காலை 7 மணி முதல் தடுப்பூசி போடும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது.
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டன. அரசு சார்பில் ஒரு வாரத்துக்கு முன்பே இதற்கான முன் ஏற்பாடுகள் செய்யும் பணி மாவட்ட ஆட்சியர்கள் மூலம் செய்யப்பட்டு வந்தது. இதனால் தடுப்பூசி முகாம்களுக்கு மக்கள் தாமாகவே முன்வந்து தடுப்பூசி போட ஆர்வம் காட்டினர்.
இன்று 20 லட்சம் பேர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் 28,36,776 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ’ஆர்வத்தைப் பொறுத்து வாரந்தோறும் தடுப்பூசி முகாம்’ - இறையன்பு