ETV Bharat / city

இயல்புநிலை திரும்பும் முன்பே பொதுத்தேர்வா? - ரத்து செய்ய வைகோ கோரிக்கை!

சென்னை: 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து விட்டு, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

vaiko
vaiko
author img

By

Published : May 13, 2020, 2:20 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " மாணவர்களின் கல்வித் திறனை அடுத்தடுத்த 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் மேம்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. எனவே அரசு இந்தக் கல்வியாண்டில் 10 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வை ரத்து செய்து, அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என ஏற்கனவே வலியுறுத்தியிருந்தேன்.

தற்போது, ஜூன் 1 முதல் 12 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். கரோனா கொள்ளை நோயைக் கட்டுப்படுத்த மே 17 ஆம் தேதிக்குப் பிறகும் ஊரடங்கு நீடிக்கப்படும் என்று பிரதமர் நேற்று தெரிவித்துள்ள நிலையில், இயல்பு நிலை திரும்ப இன்னும் எத்தனை நாட்கள் ஆகுமோ என்று தெரியவில்லை. இச்சூழலில், 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை நடத்த வேண்டிய தேவை என்ன?

எனவே, இந்தக் கல்வியாண்டில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து விட்டு, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகிறேன் " எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தமிழர்களை மீட்க சிறப்பு விமானம் - ராமதாஸ் கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.