ETV Bharat / city

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர்கள் சேர்க்கை எப்போது? விளக்கும் மாணவர் சேர்க்கைக்குழு செயலாளர் - எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர்கள் சேர்க்கை

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு நடத்திய பின்னர் தொடங்கப்படும் என மருத்துக்கல்வி மாணவர் சேர்க்கைக்குழு செயலாளர் வசந்தாமணி தெரிவித்துள்ளார்.

மாணவர் சேர்க்கைக்குழு செயலாளர் செய்தியாளார் சந்திப்பு

author img

By

Published : Dec 22, 2021, 7:57 PM IST

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் மாணவர்கள் சேர்வதது குறித்து மருத்துக்கல்வி மாணவர் சேர்க்கைக்குழு செயலாளர் வசந்தாமணி நமது ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில், “மருத்துவப்படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் பெறப்பட்டு வருகிறது. மருத்துவப்படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு 22ஆம் தேதி 12 மணி வரையில் 12ஆயிரத்து 551 பேர் பதிவு செய்துள்ளனர்.

அவர்களில் விண்ணப்பங்களை அரசு ஒதுக்கீடடு இடங்களுக்கு 3ஆயிரத்து 370 நபர்களும், சுயநிதிக்கல்லூரியிலுள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஆயிரத்து 631 பேரும் விண்ணப்பம் செய்துள்ளனர். மருத்துவ படிப்பில் சேர்வதற்கு ஜனவரி 7ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜனவரி 10ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மருத்துவக்கல்வி மாணவர்கள் சேர்க்கைக்குழுவிற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ் படிப்பில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகளும், கேகேநகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியும் சேர்த்து 37 கல்லூரியில் மாநில ஒதுக்கீட்டில் 4ஆயிரத்து 308 இடங்களும், தனியார் மருத்துவக் கல்லூரியில் ஏற்கனவே 18 உள்ளன. மேலும், புதியதாக விவேகானந்தா மருத்துவக் கல்லூரி, அருணை மருத்துவக் கல்லூரியில் தலா 150 மாணவர்கள் வீதம் 300 மாணவர்கள் சேர்பதற்கு அனுமதி கிடைத்துள்ளது. அத்துடன் சேர்த்து 20 சுயநிதி மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளனர்.

18 சுயநிதி மருத்துவக் கல்லூரியில் 2ஆயிரத்து 650 இடங்களில் அரசு ஒதுக்கீட்டில் ஆயிரத்து 483 இடங்களிலும், சுயநிதிக் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டில் ஆயிரத்து 166 இடங்களும் உள்ளன. மேலும், அரசு பல்மருத்துவக் கல்லூரிகள் 2-ல் 165 இடங்களும், 18 சுயநிதிப் பல்மருத்துவக் கல்லூரிகளிலுள்ள ஆயிரத்து 125 இடங்களுக்கும், நிர்வாக ஒதுக்கீட்டிலுள்ள 635 இடங்கள் என 6ஆயிரத்து 958 எம்பிபிஎஸ் இடங்களுக்கும், ஆயிரத்து 925 பிடிஎஸ் இடங்கள் என 8ஆயிரத்து 883 இடங்களில் மாணவர்கள் கலந்தாய்வு மூலம் சேர்க்கப்படவுள்ளனர்.

மாணவர்களின் விண்ணப்பங்களை பெற்று முடித்தப்பின்னர் அவர்களின் விண்ணப்பங்களை ஆய்வு செய்து தரவரிசை பட்டியல் வெளியிடுவோம். மருத்துவப்படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிட்டப்பின்னர் வெளியிடப்படும். பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு தமிழ்நாட்டில் அமுல்படுத்தப்படவில்லை.

மருத்துவம், பல் மருத்துவப்படிப்பிற்கு மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு நேரடியாகவே நடத்தப்படும். கலந்தாய்வின் போது மாணவர்கள் அளித்துள்ள ஆவணங்கள் சரிபார்க்கப்படும். மேலும், மாணவர்கள் கண் விழி, கைவிரல் ரேகை, நீட் தேர்வு ஹால்டிக்கெட், புகைப்படம் உள்ளிட்டவற்றை ஒப்பிட்டு பார்த்து ஆய்வு செய்து மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படும்.

மாணவர் சேர்க்கைக்குழு செயலாளர் செய்தியாளார் சந்திப்பு

மாணவர்கள் https://tnmedicalselection.net/ மற்றும் https://ugreg.tnmedicalonline.co.in/ ஆகிய இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு தனியாகவும், சுயநிதி மருத்துவக் கல்லூரியிலுள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு தனியாகவும் விண்ணப்பிக்க வேண்டும். அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் தாங்கள் படித்தப்பள்ளியின் தலைமை ஆசிரியர்களிடம் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையில் படித்ததற்கான சான்றிதழ்களை பெற்று வைக்க வேண்டும்.

மாணவர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நிர்வத்தி செய்துக் கொள்ள 044 28364822, 9884224648, 9884224649, 9884224745, 9884224746 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 37 அரசு மருத்துவக் கல்லூரிகள், இரண்டு பல் மருத்துவக் கல்லூரி, பெரம்பலூர் மாவட்டத்தில் அரசுப் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களுக்கான உதவி வழிகாட்டும் மையம் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் இங்கு சென்றும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்யலாம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: IT Raid ஜெயப்பிரியா நிதி நிறுவனத்தில் ரூ.242 கோடி வரி ஏய்ப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.