ETV Bharat / city

தொடங்கியது எம்பிபிஎஸ் வகுப்பு - பூச்செண்டு கொடுத்து வரவேற்ற சீனியர்ஸ்!

author img

By

Published : Feb 14, 2022, 1:17 PM IST

இளநிலை மருத்துவ படிப்புக்களான எம்பிபிஎஸ் பிடிஎஸ் படிப்பில் முதலாம் ஆண்டில் சேர்வதற்கு இடங்களை தேர்வு செய்த மாணவர்களுக்கு இன்று நேரடி வகுப்புகள் தொடங்கியது.

தொடங்கியது எம்பிபிஎஸ் வகுப்புகள்- பூச்செண்டு கொடுத்து வரவேற்ற சீனியர்ஸ்!

சென்னை: தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் மாணவர்கள் சேருவதற்கான முதல் கட்ட கலந்தாய்வு நடத்தப்பட்டு முடிவடைந்துள்ளது. இந்த முதல் கட்ட கலந்தாய்வில் 6 ஆயிரத்து 82 இடங்களில் 5995 பேர் இடங்களை தேர்வு செய்துள்ளனர்.

மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டு இடங்களை தேர்வு செய்து மாணவர்களுக்கும், அகில இந்திய ஒதுக்கீட்டில் இடங்களை தேர்வு செய்த மாணவர்களுக்கும் முதலாம் ஆண்டு வகுப்புகள் இன்று(பிப்ரவரி 14) முதல் தொடங்கும் என தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்திருந்தது.

அதனடிப்படையில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று தொடங்கின.

பூச்செண்டு கொடுத்து வரவேற்ற சீனியர்ஸ்!

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரிக்கு வருகை தந்த மாணவர்களை பூச்செண்டு கொடுத்து மூத்த மாணவர்கள் வரவேற்றனர். மேலும் மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி குறித்து முதல்வர் ஜெயந்தி விளக்கினார்.

அதனைத் தொடர்ந்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜெயந்தி கூறும்போது, தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகளின்படி முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

ராகிங் முன்னெச்சரிக்கை!

மேலும் கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கப்பட உள்ளது. மாணவர்கள் படிப்பதற்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.

கல்லூரியில் ராகிங் நடக்காமல் தடுப்பதற்கு தேவையான பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதுடன் பேராசிரியர்கள் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கபடுவதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க:லீக்கான வினாத்தாள் விவகாரம்: விசாரணை தொடக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.