5, 8ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்துசெய்யக்கோரி மே 17 இயக்கத்தின் சார்பில் எழும்பூர் பள்ளிக் கல்வி இயக்கக அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு மே17 இயக்கத்தினர் முழக்கங்களை எழுப்பினர். பின்னர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றபோது காவல் துறையினர் தடுத்துநிறுத்தி அவர்களைக் கைதுசெய்தனர்.
முன்னதாகச் செய்தியளர்களிடம் பேசிய மே 17 இயக்க நிர்வாகி பிரவீன்குமார், ”5, 8ஆம் வகுப்பு பயிலும் சிறுவர்களை பொதுத்தேர்வுகளை எழுதச் சொல்லும் இந்த அரசுகள் கொரோனா வைரசைவிட கொடியது. சாமானிய மக்களின் பிள்ளைகளை கல்வி கற்கவிடாமல் தடுப்பதே இதன் நோக்கம்.
ஐ.நா.வின் கூற்றுப்படி 14 வயது வரை உள்ளவர்கள் குழந்தைகள்தான். அவர்களைப் பொதுத்தேர்வுக்கு தள்ளுவது என்பது மிகப்பெரிய அநீதி. அரசு இதனைக் கருத்தில்கொண்டு 5, 8ஆம் வகுப்புகளின் பொதுத்தேர்வுகளை ரத்துசெய்யாவிட்டால் தமிழ்நாடு முழுமையாகப் போராட்டங்களை நடத்துவோம்“ என்றார்.
இதையும் படிங்க: மாணவர்கள் விருப்பப்பட்டால் சிறப்பு வகுப்புகளில் பங்கேற்கலாம்: அமைச்சர்