புதுச்சேரி நகர் பகுதியில் குபேர் அங்காடி என்ற பெரிய மார்க்கெட் இயங்கிவருகிறது. இங்கு மளிகை, காய்கறி, மீன், துணிக் கடைகள் என 800க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இப்பகுதியில் ஆறு பேருக்கு இன்று கரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து நோய் பரப்பும் பகுதியாக குபேர் அங்காடி விளங்குவதால், அரசு அங்காடியை உடனடியாக மூட உத்தரவிட்டது. அதனடிப்படையில், புதுச்சேரி நகராட்சி அலுவலர்கள், காவல் துறையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து வியாபாரிகளை உடனடியாக கடைகளை மூட உத்தரவிட்டனர்.
மேலும் இன்று மூடப்பட்ட கடைகள் இரண்டு நாள்களுக்குப் பிறகுதான் திறக்கப்படும் என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். அந்த 48 மணி நேரத்தில் அனைத்துக் கடைகளுக்கும் கிருமிநாசினி தெளிக்கப்படும் என்றும், உரிய பாதுகாப்புப் பிறகுதான் சனிக்கிழமை கடைகள் திறக்கப்படும் என்றும் வட்டாட்சியர் ராஜேஷ்கண்ணா தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரோனா குறித்து பயமில்லை: உயிருடன் விளையாடும் அரியலூர் மக்கள்!