ETV Bharat / city

அமித் ஷா மீது பதாகை வீச முயற்சித்தவர் பிடிபட்டார்! - home minister amit shah

சென்னை: மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா மீது பதாகை வீச முயற்சி செய்த துரைராஜ் (62) என்பவரை காவல் துறையினர் பிடித்து விசாரித்துவருகின்றனர்.

man-tried-to-throw-banner-at-amit-shah
man-tried-to-throw-banner-at-amit-shah
author img

By

Published : Nov 21, 2020, 5:06 PM IST

தமிழ்நாடு வந்தடைந்த மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, விமான நிலையத்திலிருந்து வெளியே வந்து அங்கு திரண்டிருந்த பாஜக தொண்டர்களைப் பார்த்து கை அசைத்தவாரே நடந்துசென்றார்.

அப்போது, அவர் மீது கூட்டத்திலிருந்த ஒருவர் பதாகை வீச முயற்சி செய்தார். அவரைத் தடுத்து நிறுத்திய காவல் துறையினர், விசாரணை நடத்தினர். அதில் அவர், சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த துரைராஜ் (62) என்பதும், சம்பவத்தின்போது, மதுபோதையில் இருந்ததும் தெரியவந்தது.

மேலும் அவர், கடந்த மாதம் நங்கநல்லூர் பாஜக ஆர்ப்பாட்டத்தின்போது, மோடி அறிவித்த ரூ.15 லட்சம் பணம் எங்கே என்று கோஷமிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'தமிழ்நாட்டில் இருப்பது என்றும் எனக்கு மகிழ்ச்சியே' - தமிழில் அமித் ஷா ட்வீட்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.