ETV Bharat / city

வீட்டு வாடகை கொடுக்க முடியாததால் வாடகை இருந்த வீட்டிலேயே தற்கொலை செய்த நபர் - குன்றத்தூரில் வாடகை இருந்த வீட்டிலேயே தற்கொலை

குன்றத்தூரில் வீட்டு வாடகை கொடுக்க முடியாததால் வாடகை இருந்த வீட்டிலேயே தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டு வாடகை கொடுக்க முடியாததால் வாடகை இருந்த வீட்டிலேயே தற்கொலை

author img

By

Published : Jun 28, 2022, 4:21 PM IST

Updated : Jun 28, 2022, 4:28 PM IST

குன்றத்தூர், புது வட்டாரம், கன்னியம்மன் தெருவை சேர்ந்தவர் ஆதம் பாஷா(35), இவரது மனைவி அம்ருதீன் அவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். சமையல் வேலை செய்து வந்த ஆதம்பாசா தான் குடியிருந்த வீட்டிற்கு சென்று, தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வந்தது.

அத்தகவலையடுத்து குன்றத்தூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த ஆதம்பாசா உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், கடந்த ஒரு ஆண்டாக அவர் குடியிருக்கும் வீட்டிற்கு வாடகை கொடுக்காமல் இருந்து வந்ததாகவும், அவர் குடியிருந்த வீட்டின் அருகே வசிப்பவர்களிடம் கடன் வாங்கியதாகவும், இதனால் வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்யுமாறு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் மிகுந்த மன உளைச்சலிலிருந்து வந்த ஆதம்பாசா தனது மனைவி மற்றும் பிள்ளைகளை உறவினர் வீட்டிற்கு அனுப்பிவிட்டு குடிபோதையில் தற்கொலை செய்து கொண்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து குன்றத்தூர் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தற்கொலை எண்ணம் தோன்றினால் 104 அல்லது சிநேகா உதவி எண்களை அழையுங்கள்

இதையும் படிங்க: பாலியல் தொழிலுக்கு வருமாறு மிரட்டல் - துணை நடிகை புகார்

Last Updated : Jun 28, 2022, 4:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.