சென்னை: ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் பாஸ்கரன் நேற்று (செப் 3) கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த நிலையில் விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவர் செங்குன்றம் அருகே கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், கணேசன் கடந்த ஐந்து வருடமாக விருகம்பாக்கம் பகுதியில் பாலியல் தொழில் செய்து வருவதாகவும், கணேசனுக்கும் பாஸ்கருக்கும் கடந்த இரண்டு வருடங்களாக பழக்கம் ஏற்பட்டு அடிக்கடி பாஸ்கர் அங்கு வந்து செல்வதும் தெரியவந்தது.
அந்தவகையில், பாஸ்கரன் நேற்று வழக்கம்போல் கணேசன் வீட்டிற்கு சென்று பாலியல் தேவைகளுக்காக குறிப்பிட்ட இரண்டு பெண்களை கேட்டதாகவும், அதற்கு அவர்கள் வர தாமதமாகும் என்று கணேசன் கூறியதற்கு, பாஸ்கரன் ஆத்திரமடைந்து கொச்சை வார்த்தைகளால் திட்டியதாகவும், இதனால் இவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டதும் தெரியவந்தது.
மேலும் இதில், கணேசன் ஆத்திரத்தில் பாஸ்கரனை அடித்து கீழே தள்ளிவிட்டு கொலை செய்து கை கால்களை கட்டி இரு சக்கர வாகனத்தில் வைத்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் சென்று உடலை வீசிவிட்டுச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து இந்த கொலையில் வேறு யாருக்காவது தொடர்புகள் உள்ளதா என்பது குறித்தும், கொள்ளைக்கான முழு காரணம் என்ன என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: திருட முயன்றவர்களை தடுத்த மேஸ்திரியை உடைந்த பீர்பாட்டிலால் சரமாரியாக தாக்கிய கொள்ளையர்கள்...