சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம் கோட்டம்-120இல் இருக்கும் கிருஷ்ணாம்பேட்டை மயானபூமியில் நீராவி தகனமேடை மற்றும் புகைப்போக்கியில் பழுது ஏற்பட்டுள்ளதால், அதனை சீர்செய்யும் பொருட்டு 20.01.2021 முதல் 19.02.2021 வரை மேற்கண்ட மயானபூமி இயங்காது என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மேலும், பராமரிப்பு பணிகள் நடைபெறும் நாள்களில் பொதுமக்கள் அருகில் உள்ள மயிலாப்பூர் மயானபூமியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.
இதையும் படிங்க : சென்னையில் கன்டெய்னர் மினி கிளினிக்: திறந்து வைத்த மாநகராட்சி ஆணையர்