இது குறித்து அவர் இன்று கூறுகையில், ”சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில், அரசின் வழிகாட்டுதலின் அடிப்படையில் முதுநிலை வகுப்புகள் தொடங்கி செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், வரும் 8 ஆம் தேதி முதல் அனைத்து நிலை வகுப்புகளையும் தொடங்க அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நடப்பு பருவத்திற்கான வகுப்புகளை ஆன்லைன் மூலம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது” எனக் கூறினார்.
மேலும், பல்கலைக்கழக பதிவாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ”பல வெளிநாடுகளில் இருந்து மாணவர்கள் சென்னை பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்து வருகின்றனர். தற்போது வெளிநாடுகளில் உள்ள மாணவர்கள் இந்தியா வர முடியாத நிலையில் ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதன் காரணமாகவும் சேப்பாக்கம் மற்றும் மெரினா மாணவர் விடுதிகள் புனரமைப்பு பணிகள் காரணமாகவும், வகுப்புகள் மற்றும் தேர்வுகள் அனைத்தும் ஆன்லைனில் மட்டுமே நடைபெறும்.
செய்முறை வகுப்புகளுக்கு மட்டும் மாணவர்கள் நேரடியாக வரவேண்டும். சந்தேகங்களை கேட்க பல்கலைக்கழகம், கல்லூரிகளுக்கு மாணவர்கள் நேரில் வரலாம். தேவைப்படின் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி விடுதிகளை திறந்து செயல்படுத்தவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. சேப்பாக்கம் மற்றும் மெரினா வளாகத்தில் உள்ள விடுதி மாணவர்களுக்கு சென்னை தரமணியில் விடுதி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான இடஒதுக்கீடு ஏற்பு!