ஏடிஎம் கொள்ளைக்கு முயன்ற இளைஞனுக்கு லுக் அவுட் நோட்டீஸ்... - To avoid escape of youth who attempted to rob ATM
சென்னையில் ஏடிஎம்மில் ஸ்கிம்மர் கருவி பொருத்திப் பணம் திருட முயன்ற வழக்கில் தலைமறைவான குற்றவாளி வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க, அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை: அர்மேனியா நாட்டில் மருத்துவம் படித்த ஆனந்த் என்பவர் மீது, சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள ஏடிஎம்மில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி பணம் திருட முயன்றதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் தொடர்ந்து தலைமறைவாக இருந்த ஆனந்தை சென்னை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகிறது.
இந்நிலையில், ஆனந்த் வட மாநிலங்களில் தலைமறைவாக உள்ளதாக காவல் துறைக்கு வந்த தகவலின் பேரில் அவர் வெளிநாடு தப்பிச்செல்லாமல் இருக்க காவல்துறை தரப்பில் அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, இந்த வழக்கில் ஆனந்தின் தந்தை மனோகர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சுடுகாட்டிற்குச் செல்ல பாதையில்லை - திமுக எம்.எல்.ஏ காரை சுத்துப்போட்ட மக்கள்