பால் பிராட்மேன் என்பவர் லண்டனைச் சேர்ந்தவர். பள்ளி ஆசிரியரான இவர், 15 மாணவர்களுடன் கடந்த சில தினங்களுக்கு முன்பு கல்விச் சுற்றுலாவாக இந்தியாவிற்கு வந்துள்ளார். அதன் பின்பு தமிழகம் வந்து பயணத்தை முடித்துவிட்டு இன்று காலை பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் விமானத்தில் லண்டன் செல்ல வந்திருக்கிறார்.
அப்போது பாதுகாப்பு அலுவலர்கள் சோதனை செய்தபோது அவரிடம் சேட்டிலைட் ஃபோனை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை மட்டும் காவல்துறையினரிடம் ஒப்படைத்துவிட்டு, மற்ற 14 மாணவர்களை விமானத்தில் லண்டனுக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து இங்கிலாந்து நாட்டு தூதரகத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.